மொஹமட் சியாமுடன் சேர்த்து 9 படுகொலைகளின் சூத்திரதாரி வாஸ் குணவர்த்தன
பம்பலப்பிட்டியில் கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரை கடத்தப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மேலும் எட்டுக் கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஒப்பந்தக் கொலை தொடர்பாக, காவல்துறையின் மூத்த அதிகாரியான கொழும்பு வடக்கு பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் 6 சிறிலங்கா காவல்துறையினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலேயே மேலும் எட்டுக் கொலைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. வாஸ் குணவர்த்தனவின் நெருங்கிய நண்பர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு துப்பாக்கிகள் பேலியகொட பகுதியில் மீட்கப்பட்டு அரசாங்க பகுப்பாய்வாளரின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையே தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தான் நம் நாட்டு காவல் துறையும், சட்டத் துறையும். இப்படியானவர்களை சித்திரவதை செய்தே கொன்றொழிக்க வேண்டும்.
ReplyDelete