Header Ads



மன்னர் அப்துல்லாவுக்கு எதிராக போராடியவருக்கு 8 வருட சிறைத்தண்டனை

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது.

எனினும், தடையை மீறி சவூதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல், தேவையற்ற சிறை தண்டனை, தண்டனை காலத்தை கடந்த பின்னரும் விடுதலை செய்ய மறுப்பது, சிறை சித்திரவதை ஆகியவற்றை இவர் தனது இணையதளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார்.

இவரது முயற்சியின் விளைவாக சவூதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனையடுத்து, தேச துரோக குற்றத்தின் கீழ் இவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தனது தவறுக்கு வருந்தி திருந்தினால் 5 ஆண்டு தண்டனை குறைப்புக்கும் பரிந்துரைத்த நீதிமன்றம் அப்துல் கரீம் அல்-காதர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தது.

No comments

Powered by Blogger.