Header Ads



பொலிஸாரை சிறைபிடித்த பொதுமக்கள் - துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழப்பு


இந்தியா -  பீகார் மாநிலம் பாகா மாவட்டத்தில் போலீசாரை சிறைபிடித்த கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.பீகார் மாநிலம் பாகா மாவட்டம் தர்தாரி கிராமத்தை சேர்ந்த சந்தேஷ்வர் காஜி என்பவர் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக நேற்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவரது அடையாளத்தை கண்டுபிடிப்பதற்காக நவ்ரங்கியா இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் டீம் ஒன்று அந்த பகுதிக்கு விரைந்தது. போலீஸ் விசாரணையில் அது சந்தேஷ்வர் காஜி இல்லை என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீஸ் டீம் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தது. தர்தாரி கிராமம் வழியாக போலீஸ் டீம் வந்த போது அவர்களை கிராம  மக்கள் மடக்கி சிறை பிடித்தனர். சந்தேஷ்வர் காஜியை கண்டுபிடிப்பதில் போலீசார் அக்கறை காட்ட வில்லை என்றும் உயர் அதிகாரிகள் வந்தால்தான் போலீசாரை விடுவிப்போம் எனவும் எச்சரித்தனர்.  

சிறை பிடிக்கப்பட்ட போலீசாரை மீட்பதற்காக நேற்று மாலை பாகா எஸ்பி சைலேந்திர குமார் தலைமையில் போலீஸ் படை தர்தாரி கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிராம மக்களுடன் சைலேந்திர குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கிராம மக்களை கலைக்க முயன்றனர். போலீசார் மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்கினர். ஆண்கள், பெண்கள் என சுமார் 800க்கும் அதிகமான கிராம மக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். 15 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

இதில் குண்டு பாய்ந்து கிராம மக்கள் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் நிலைமை மோசமாக உள்ளது. எஸ்பி சைலேந்திர குமார், இன்ஸ்பெக்டர் டிஎன்.ஜா மற்றும் பல கான்ஸ்டபிள்களுக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்ததும் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தர்தாரி கிராமம் மற்றும் அதன் சுற்று பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

1 comment:

  1. the indian police already got mentality effected human.what they do? they will do their duty. killed the people.amnesty international reports says indian army and police are mentality effected forces.they brought up like that.so

    ReplyDelete

Powered by Blogger.