உயிருக்கு போராடிய மக்களை மீட்க 65,000 ரூபா பேரம்பேசிய எம்.பி.
(Adt) சுழல் காற்று காரணமாக மீனவர் சமூகம் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தமை தேசிய அனர்த்தம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதனாலேயே பலபிட்டி பிரதேசத்தில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்த எதிர்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், தான் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மோதல் நிலை ஏற்பட்டமை குறித்து இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜேதாஸ ராஜபக்ஷ விளக்கமளிக்கையில்,
´ஒரு மரண வீட்டில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன மேலும் நூறு பேருடன் குடிபோதையில் இருப்பதாக நாம் முன்கூட்டியே அறிந்தோம். அவர்கள் எங்களை வாகனத்தில் இருந்து கீழிறக்கி தாக்க முயற்சித்த போதும் அம்பலாங்கொட மற்றும் அஹுங்கல்ல பொலிஸார் நிலைமையை தடுத்து எம்மை காப்பாற்றினர்.
கடும் காற்றால் பாதிக்கப்பட்ட தமது உறவினர்களை மீட்க சஜின்வாஸிற்கு வாக்களித்த மக்கள் அவரிடம் ஹெலிக்கொப்டர் கோரினர். அவர் தர மறுத்துவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஊடக நிறுவனமொன்றிற்கு 1 மணித்தியாலம் வீடியோ எடுக்க 65,000 ரூபாவிற்கு சஜின்வாஸ் ஹெலிக்கொப்டர் கொடுத்தார்.
தான் சஜின்வாஸ் குணவர்த்தன குறித்து கவலையடையவில்லை. இப்படியான கொலையாளிகளை பாராளுமன்றிற்கு அழைத்துவந்த தலைவர்களை நினைத்தே கவலையடைகிறேன்.
ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை மாநாடுகளுக்கு அடிக்கடி செல்பவர் சஜின்வாஸ். இதனால் சர்வதேச அளவில் இலங்கையின் பெயர் இன்னும் கெடும்.
சஜின்வாஸ் ஊடகங்களுக்கு ஒழுக்க தர்மம் கற்பிக்க முனைகிறார். தான் என்ன கதைக்கிறோம் என்றுகூட ஒழுக்க தர்மம் தெரியாதவர் சஜின்வாஸ்.
தாக்குதல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பிரச்சினையை ஜெனீவா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கு கொண்டுசெல்வோம்." இவ்வாறு விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
Post a Comment