பல்கலைக்கழகங்களில் மேலும் 6,445 மாணவர்களை இணைக்க தீர்மானம்
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து இணைந்துகொள்ளாத மாணவர்களுக்குப் பதிலாக மேலும் 6,455 மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களின் கீழ் இந்தக் குழுவினர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார்.
இவர்களை இணைத்துக்கொண்ட பின்னர் 2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான கையேடு எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், மாணவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கேஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார். Nf
Post a Comment