Header Ads



காத்தான்குடி சம்மேளன தலைவராக 6வது தடவையாக காலித் தெரிவு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு ஆறாவது தடவை தலைவராக முன்னாள் காதி நீதிபதி எம்.ரீ.எம் காலித் (ஜேபி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியின் மூன்று பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்களின் சுழற்சி முறையிலான சம்மேளன தலைமை இவ்வருடம் காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு உரித்தானதால் அதன் நிருவாகத்தினால் 2013 மற்றும் 2014 ஆண்டுகளுக்கான சம்மேளன தலைவராக முன்னாள் காதி நீதிபதி எம்.ரீ.எம் காலித் (ஜேபி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் சம்மேளன செயலாளர் ஜம்இய்யத்துல் உலமாவுக்குரியதால் ஜம்இயத்துல் உலமாவினால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த மௌலவி எஸ்.எச்.எம்.றமீஸ் ஹாபிழ் (ஜமாலி) பீஏ; சம்மேளன செயலாளராகவும் புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் சார்பாக எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் (ஜே பீ) பொருளாளராகவும், பிரதித் தலைவராக சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் பீ.ஏ, உதவித்தலைவர்களாக நூராணியா ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவர் பீ.எம்.பாயிஸும் புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.ஹனீபா,  மண்முனை வடக்கு, மண்முனை பற்று சார்பாக ஒவ்வொரு பிரதிநிதியும்தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை உதவிச் செயலாளர்களாக ஏ.எல்.இஷட்பஹ்மி பீஏ, எம்.சீ.எம்.ஜவ்பர் (கச்சேரி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

1984ஆம் ஆண்டு அஷ்ஷஹீட் அகமட்லெப்பை அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தானகுடியில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.