Header Ads



5 ஆம் தர புலமைப் பரிசில் பெற்றோர்களுக்கான பரீட்சையா..?

(நஷ்ஹத் அனா)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இலங்கையில் முதல் வலயமாக மிளிருவற்கு பாடசாலைகள் மாத்திரமின்றி வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்புமே இதற்கு காரணமாகும் என்று ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

ஏறாவூர் எக்ஸ்பிரஸ் டவர் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற 05 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் எல்.ரி.முனாவர் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

 மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றது இச் செயற்பாடுகளுக்கு வெளி நிறுவனங்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதனால் மாணவர்களின் பெறுபேறுகள் அதிகரிக்கின்றன. இதனால் மட்டக்களப்பு மத்தி வலயம் இலங்கையில் முதல் வலயமாக தொடர்ச்சியாக இரு தடவைகள் தெரிவு செய்யப் பட்டுள்ளமைக்கு பாடசாலைகள் மாத்திரமின்றி வெளி நிறுவனங்களும் இதற்கு காரணமாகும். ஆதலால் இவ்வாறான நிறுவனங்கள் கல்விக்காக ஆற்றிவரும் சேவையை நான் பாராட்டுகின்றேன்.

ஜந்தாம் தர புலமைப் பரீசில் பரீட்சையைப் பொறுத்தவரை இப் பரீட்சை மாணவர்களுகான பரீட்சை என்பதைவிட அது பெற்றோகளுக்கான பரீட்சை என்றே கூற வேண்டும் அந்தளவுக்கு பெற்றோர்கள் இப் பரீட்சையில் கவனமெடுத்து தங்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. 

ஆகவே பொதுவாக கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவது அவசியமாகும் அதனால்தான் இப் போது கல்வி ஒரு மனிதனுடைய வாழ்க்;கையில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே மாணவர்கள் யாராக இருந்தாலும் கல்வி கற்கின்ற வேளையில் ஒழுக்க விழுமியங்களுடன் கல்வி கற்க வேண்டும். ஒழுக்கம் இல்லாத கலவியால் நாம் எந்த நன்மைகளையும் பெற முடியாது. ஆதலால் கல்விகற்கின்ற மாணவர்கள் கல்வியோடு ஒழுக்க விழுமியங்ககையும் கற்றறிந்து கொள்ளவேண்டும்.

பாடசாலையில் கல்விகற்கின்ற மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் எடுத்து வரும் முயற்சி களுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக திகழ வேண்டும். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள 05ஆம் தர புலமைப் பரீசில் பரீட்சைக்காக மாணவர்கள் மிக ஆர்வத்தோடு கல்வி கற்று அனைவரும் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பொது நிறுவனங்களுக்கும் வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுக்க வேண்டும் என்றார். 

ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான எம்.எல்.ரெபுபாசம் ஏ.ஆர்.பெறோஸ்  பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.