Header Ads



இலங்கையர்களின் பணத்தை கடன் அட்டைகள் மூலம் திருடியவர்களுக்கு 52 வருட சிறை

(Tn) போலியாக தயாரிக்கப்பட்ட கடன் அட்டைகள் மூலம் ஒரு கோடியே 11 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு தலா 52 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தலா 52 இலட்ச ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரீதி பத்மன் சூரசேன நேற்று தீர்ப்பளித்தார்.

இரண்டு உக்ரேன் பிரஜைகளும் போலியாக தயாரிக்கப்பட்ட 99 கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏ.ரி.எம். இயந்திரங்கள் ஊடாக பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவர் மீதும் 26 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒவ்வொரு வருக்கும் தலா 2 வருடம் வீதம் 52 வருடகால சிறைத் தண்ட னையும் சுமத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 இலட்சம் ரூபா வீதம் 52 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது.

104 இலட்ச ரூபாவையும் செலுத்த இருவரும் இணங்காத காரணத்தினால் ஒவ்வொரு வருக்கும் மேலதிகமாக தலா 52 மாதகால சிறைத் தண்ட னையும் வழங்கி தீர்ப் பளிக்கப் பட்டது. உக்ரேன் பிரஜைகளான யூ ஷ¥மார்க் என்ற நபரும் பியோஸ்கி மஸ்கின் என்ற நபருமே இவ்வாறு தண்டனைக் குள்ளாகினர்.

இவர்கள் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து போலி கிரடிட் கார்ட்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அரசுடமை யாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

2012 மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக் குள் வென்னப்புவ, சீதுவ, ஜாஎல, நீர் கொழும்பு, நிட்டம்புவ, யக்கல, கட்டு நாயக்க, சிலாபம் போன்ற பகுதிகளில் ஏ.ரி.எம். இயந்திரங்களில் பண மோசடிகள் செய்துள்ளனர்.

கொமர்ஷியல் வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கிக்குரிய கிரடிட் கார்ட்டுகளையே பயன்படுத்தி 111 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்படும் போது போலியாக தயாரிக்கப்பட்ட 99 கிரடிட் கார்ட்டுகளும் வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரடிட் கார்ட்டுகள் தயாரிக்கும் உபகரணங்கள் வைத்திருந்தமை தரவு களை மாற்றும் கணனிகள் பயன்படுத் தியமை 99 போலி கிரடிட் கார்ட்டுகள் வைத்திருந்தமை போன்ற காரணங்களின் அடிப்படையில் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரமும் 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க மோசடி தொடர்பான சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு, கடற்கரை வீதியிலமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றாக ரஷ்ய மொழியில் இருவருக்கும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. இருவரும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்

அரச சட்டத்தரணி சமிந்த அத்துகோரள முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரா கியிருந்தார். பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி ஆனந்த ஹெட்டியாராச்சி ஆஜராகியிருந்தார்.

No comments

Powered by Blogger.