ஒரே பத்திரிகையில் 50 வருடகாலமாக பிராந்திய நிருபராக பணியாற்றி சாதனை
க.ப. சிவம் போன்ற மூத்த பத்திரிகையாளர்களை உதாரணமாகக் கொண்டு புதிய தலைமுறையினர் பணியாற்ற முன் வருதல் வேண்டுமென என மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
(30.6.2013 இரவு) கண்டி இந்து கலாசார நிலையத்தில் இடம் பெற்ற மூத்த பத்திரிகையாளரான க.ப.சிவம் அவர்கள் அகவை 80ல் பிரவேசித்தல் மற்றும் ஊடகத் துறையில் அறை நூற்றாண்டிற்கு மேல் தடம் பதித்தமை என்பவை தொடர்பாக அவரை கௌரவிக்கும் வைபவம் ஒன்று கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவர் பொன்னாடை போர்த்தப்பட்டு பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படடார்.
க.ப.சிவம் தனது நன்றி உரையில் தெரிவித்தாவது.
1948 காலப்பகுதியில் இருந்து 1960 வரையான காலப் பகுதியில் தேர்டக் காட்டான் என்ற நாமம் கொண்டு மலையக மக்கள் மட்டம் தட்டப்பட்டு வந்தனர். மலையகத்தர்களாலும் சாதிக்க முடியும் என்ற உண்மைக்காக நான் பி.டி.ராஜனுடன் இணைந்து பேராடினேன். அன்று பிரபலம் பெற்று விளங்கிய தி.மு.க.வின் கண்டிக்கிளை தலைவராக இருந்து பலதையும் சாதித்தோம் என்றார்.
அவருக்கு வழங்கப்பட்ட வாழ்த்து பத்திரத்தில் 'பத்திரிகையால் சிவத்திற்குப் புகழ். சிவத்தினால் பத்திரிகைக்குப் புகழ்' என வாழ்த்ப்பட்டார். 50ற்கும் மேற்பட்ட வருடகாலம் ஒரே பத்திரிகையில் பிரதேச நிருபராக மட்டுமே பணிபுரிந்து தன் வாழ்வை மலையக மக்களின் உயர்ச்சிக்காக மட்டும் பயன் படுத்திய உதாரண புருசர் என அவர் அங்கு வாழ்த்;தப்பட்டார்.
Post a Comment