கோல்டன் கீ நிறுவன முன்னாள் பணிப்பாளரின் 50 கோடி ரூபா சொத்து அரசுடமையானது
கோல்டன் கீ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சிசிலி கொத்தலாவல அவர்களின் 50 கோடி ரூபா பெறுமதியான சொத்து அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
கோல்டன் கீ நிறுவனத்தில் பணத்தினை வைப்பிலிட்டவர்களுக்கு பணம் செலுத்தும் நோக்கிலேயே இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
கோல்டன் கீ நிறுவனத்தை மூடியதனால் அதில் பணத்தை வைப்புச் செய்தவர்கள் எதிர்நோக்கிய நட்டத்தை ஈடு செய்ய இந்த சொத்துக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
செலிங்கோ குழும நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலயின் மனைவியான சிசிலி கொத்தலாவல தற்போது லண்டனில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிசிலி கொத்தலாவல இன்டர் போலினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது. un
Post a Comment