Header Ads



எகிப்தில் 5 பேருக்கு மரண தண்டனை


எகிப்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள செங்கடல் வழியாக 3 டன் தடை செய்யப்பட்ட ஹஷிஷ் என்ற போதைப்பொருளை கடத்த முயன்ற 5 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதில் பிரிட்டன் மாலுமி ஒருவர், சிசெல்ஸ் நாட்டவர் 3 பேர் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவர் என 5 வெளிநாட்டவர்கள் போதைப்பொருட்களை எகிப்திற்குள் கடத்த முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் அவர்களுக்கு 12 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

No comments

Powered by Blogger.