Header Ads



கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை 440 மில்லியன் செலவில் குடிநீர் விநியோக திட்டம்


(ஏ.எல். ஜுனைதீன்)

     அம்பாறை மாவட்டத்திலுள்ள கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சாய்ந்தமருது கல்முனை பாண்டிருப்பு மருதமுனை ஆகிய கரையோரப் பிரதேசங்களுக்கு சீரான நீர் விநியோகம் செய்வதற்கென 440 மில்லியன் ரூபா செலவில் குடி நீர் விநியோக வேலைத் திட்டம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

    ஜப்பான் நாட்டத்தைச் சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் இதற்கான நிதி உதவியை வழங்குகின்றது. இந்த நீர் விநியோகத் திட்டத்திற்கென 630 மில்லி மீற்றர் விட்டமுள்ள ( P E ) குழாய் வயல் நிலத்தை அண்டியுள்ள பாதையோரமாக தற்போது பதிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

   VONLAN CONSTRUCTIONS நிறுவனம் இவ்வேலைத்திட்டத்தை செய்கின்றது. 18 மாதங்களுக்குள் வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்படும் என திட்ட உதவிப் பொறியியலாளர் கே.ஹஸான் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெர்வித்தார்.

No comments

Powered by Blogger.