Header Ads



இலங்கையர் 41 பேரை அவுஸ்திரேலியா நாடுகடத்தியது - இந்தோனேசியாவில் 43 இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் 41 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரென்டன் ஓ கோனர் இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எண்ணிக்கையுடன் இதுவரையில் அவுஸதிரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1247ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அவர்களுள் 1045 பேர் பலவந்தமாக இலங்கைக்கு நாடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் 30 விமானங்கள் மூலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

..............................................................................................

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவுஸ்திரேலியாவின் மேற்கு ஜாவா பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சியன்ஜுர் அதிவேக பாதையில் பயணித்த அவர்களை பின்தொடர்ந்து சென்று கைது செய்யப்பட்டதாக, இந்தோனேசிய காவற்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.