Header Ads



பஹ்ரைனில் இருந்துவந்த 40.000 மெற்றிக் தொன் டீசலை இலங்கை திருப்பியனுப்பியது

இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட தரம் குறைந்த 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பலொன்றை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருப்பி அனுப்பியதாக பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சு கூறியது.

பஹ்ரைனில் இருந்து கடந்த 22 ஆம் திகதி எடுத்துவரப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட டீசலே தரக்குறைவானது என அடையாளங்காணப்பட்டதாக அறிவிக் கப்படுகிறது. டீசல் மாதிரிகள் சபுகஸ்கந்த மற்றும் கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டன. இதற்குப் பதிலாக வேறு டீசல் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.