இலங்கையரிடம் 35 இலட்சம் ரூபா பணத்தை மோசடிசெய்த மாலைதீவு பிரஜை கைது
(மொஹொமட் ஆஸிக்)
வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 35 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த மாலைதீவு நாட்டு பிரஜை ஒருவரை இன்று 2013 06 03 அலவத்துகொடை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
அலவத்துகொடை மாவத்துபொலை பிரதேசத்தை சேர்;ந்த நபர் ஒருவருக்கு வெளி நாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி அவரிடம் 35 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ள அவர் தலைமறைவாகி உள்ளார். பின்னர் பணம் பொடுத்தவர் கண்டி விஷேட குற்றப் புளனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதுடன் குறித்த மாலைதீவு நாட்டு பிரஜை அதன் பின் இவரது வீட்டுக்கு சமூகம் தந்து பணத்தை தருவதாக கூறிவுள்ளார். பல முறை இவ்வாரு கூறியும் பணத்தை கொடுக்காததால் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி நீதி மன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
Post a Comment