Header Ads



ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு 30 இலட்சம் ரூபா செலவில் வரவேற்பு தோரணை


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையில் உருவான தெயட்ட கிருல தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் (30) முப்பது இலட்சம் ரூபா செலவில் மட்டக்களப்பு-காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கான பிரமாண்ட வரவேற்பு தோரணை அமைக்கப்படவுள்ளது.

குறித்த வரவேற்பு தோரணைக்கான நிர்மான வேலைகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவ் இடத்திற்கு இன்று வியாழக்கிழமை பிற்பகல் திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு இடம்பெறும் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு மட்டுமன்றி அதிகாரிகளுக்கு அபிவிருத்தி தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.

இவ் விஜயத்தில் அவரோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு அதிகாரி முஹம்மட் றுஸ்வின்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அதிகார்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இறுதி வேலைத்திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. மூதூர் சகோதரி ரிசானா நபீக்கின் குடும்பத்தாரிடம் கையளிக்குமாறு சவூதி அரேபிய தனவந்தர் கையளித்த பத்து இலட்சம் ரூபாவுக்கும் என்ன நடந்துள்ளது?

    அக்குடும்பத்திடம் கையளிக்கப்படடு விட்டதா? அல்லது அந்த சவூதி தனவந்தரிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதா?

    இதுவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பொருளாதார அபிவிருத்தியில் சேர்க்கப்பட்டுள்ளதா?

    பதில்..? பதில்..? பதில்..?

    புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.