30 ஆண்டுகளாக தொடர்ந்து இரத்தம் குடிக்கும் பெண்
அமெரிக்காவை சேர்ந்த பெண், தினமும், இரண்டு லிட்டர் மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் மூலம் தான், இளமையாகவும் புத்துணர்வுடனும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், பென்சில்வேனியாவை சேர்ந்தவர், ஜூலியா கேப்லஸ், 45. இவர், கடந்த, 30 ஆண்டுகளாக, மனித ரத்தத்தை குடித்து வருகிறார். நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என, பலரும், ஜூலியாவிற்கு தங்கள் ரத்தத்தை, இலவசமாக வழங்குகின்றனர். ""15 வயதில், தன் காதலனை முத்தமிட்டபோது, ஆர்வத்தில் அவரின் உதட்டை கடித்து விட்டதாகவும், அப்போது கண்ட ரத்தத்தின் ருசி, தன்னை இன்னும் விடவில்லை,'' என, ஜூலியா தெரிவித்துள்ளார். ரத்தத்தில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால், இதை பருகுவதின் மூலம், தான் மிகவும் இளமையுடனும், புத்துணர்வாகவும் இருப்பதாக, ஜூலியா கூறுகிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ரத்தம் குடிப்பதற்காக, தானே பிரத்யேகமான முறையில் ஊசி ஒன்றை தயாரித்துள்ளார். இதைக் கொண்டு, அவர்களின் உடலில் சிறிய துளையிட்டு, நேரடியாக ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார். சில நேரங்களில், ரத்த வங்கிக்கு சென்று, விலை கொடுத்து வாங்கியும், ரத்தம் குடிக்கிறார். இவருக்கு ரத்தம் கொடுக்க, ஏராளமான நபர்கள் காத்திருக்கின்றனர். தவிர, இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் கொடையாளர்கள், அதை, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து மகிழ்கின்றனர். கடந்த, 30 ஆண்டுகளாக ரத்தம் குடிக்கும் ஜூலியாவுக்கு, திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment