Header Ads



பிரிட்டன் செல்லும் இலங்கையர்கள் 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணையாக செலுத்த வேண்டும்

(Gtn) பிரித்தானியா செல்லும் இலங்கையர்கள் 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணையாக செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிக ஆபத்து மிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு வீசா வழங்கும் போது புதிய நடைமுறைகளை பின்பற்ற பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கான வீசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கையர் ஒருவர் பிரித்தானியா செல்ல வீசா கோரி விண்ணப்பிக்கும் போது 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணையாக வைப்புச் செய்ய வேண்டும்.

ஆறு ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இவ்வாறு அறவீடு செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலாளர் திரேசியா மே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

3 comments:

  1. லண்டன் லண்டன் என்று எங்கள் ஆட்கள் ஒடூரங்கல் அங்கே என்னமோ சுவர்க்கலோகம் என நினைத்து,பொய் பார்த்தல் தெரியும் அங்கே உள்ள ஓட்டைகள்.அஞ்சி பவுனுக்கும் கொலையும் கொள்ளையும் செய்றாங்கல்.லண்டன் பார்க்கவேண்டும் என்றால் கொழும்புக்கு போகவும்,கொழும்பும் லண்டனும் இரண்டும் ஒன்றே தான்.

    ReplyDelete
  2. ஸ்ரீலங்கா இருந்த கடன் கடன் (பொல்லு) காரங்கள் எல்லாமே Visiting எவகிட்டயவது பணத்த பெற்று தண்ட Account போட்டு . விசா கிடைத்தவுடன் UK தான் Aslyum அடித்துள்ளார்கள். நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிரவேறு ஏதுவுமில்லை. என்று கதை எழுதினோர் பலர். கடைசியில் கதை அல்ல நிஜம் என்பார்கள். இதன் காரணமாக தான் 3000 ச்ற்றேல்லிங் பவுண்ட்ஸ் வெச்சிட்டு போங்க திரும்பி வண்ட தருகின்றோம்

    ReplyDelete

Powered by Blogger.