மியன்மாரில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு - கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்கள் வபாத்
மியன்மாரில் ரகின் மாநிலத்தில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு கர்ப்பமுற்ற பெண்ணும் அடங்குகிறார்.
அகதி முகாம்களில் இருக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களை மற்றொரு தற்காலிக முகாமுக்கு இடம்மாற்ற முயன்ற போது ஏற்பட்ட கலவரத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ரகின் மாநிலத்தில் கடந்த ஆண்டு ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை மிரங்கா நகருக்கு அருகில் இருக்கும் முகாமுக்கு வந்த பொலிஸார் அங்கிருந்தோரை புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக முகாமுக்கு இடம் மாற்ற முயன்றனர். எனினும் பொலிஸார் இதன்போது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது தெளிவில்லாமல் உள்ளது.
எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஐவர் காயமடைந்ததாகவும் ஒரு சில உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பங்காளி மொழி பேசும் ரொஹிங்கியா முஸ்லிம்களை மியன்மார் தனது நாட்டு பிரஜையாக ஏற்பதில்லை என்பதோடு இவர்கள் மீது அரசு வன்முறையை கட்டவிழ்த்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. tn
Post a Comment