3 நாள் கேளிக்கைகளுக்காக 330 கோடி செலவிட்ட சவூதி அரேபிய இளவரசர்
எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் இளவரசராக நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப் ஆட்சி புரிந்து வருகிறார்.
இவரது மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் தனது கல்லூரி தோழர்களுக்கு 'ட்ரீட்' அளிக்க இளவரசர் முடிவு செய்தார்.
சுமார் 60 நண்பர்கள் புடைசூழ டிஸ்னி லேண்டிற்கு வந்த இளவரசருக்காக அங்குள்ள கலைஞர்கள் சிறப்பு காட்சிகளை நடத்தி மகிழ்வித்தனர். இப்படி 3 நாட்களில் கேளிக்கைக்காக 12 1/2 கோடி பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்புக்கு 110 கோடி ரூபாய்) ஃபஹ்த் அல்-சவுத் செலவிட்டுள்ளார்.
பரிதாபம். இவர்களிடமுள்ள பணத்தின் திமிரால் முட்டாள்களாகிவிட்டனர். எத்தனையோ முஸ்லிம்கள் தன் நாளொரு வேளை பசியைத் தீர்த்துக்கொள்ள வசதியின்றி அல்லலுறும்போது ஆடம்பரத்திலும் ஆடம்பரமாக திருமணத்தை நடாத்தி பெருமிதமடையும் இவர்கள் மறுமையில் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இவர்கள் சிரமப்பட்டு சம்பாதித்த பணமல்லவே. அதன் பெறுமதி தெரியாது. மேற்கத்திய கலாசாரத்தின் பிடியில் சிக்குண்டவர்களே இவர்கள். அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்.
ReplyDelete"எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னராக நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப் ஆட்சி புரிந்து வருகிறார"
ReplyDeleteஇது பிழையான தகவல், சவூதியில் மன்னராக இருப்பவர் அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் பின் அல் சவூத்.
santhanam kuudinaal thadavada?
ReplyDeleteHi Friends,
ReplyDeleteகோடிக்கணக்கான முஸ்லீம்கள் பசி பட்டினியிலே வாடிக்கொண்டிருக்கும் உலகில் இஸ்லாம் பிறந்ததிலிருந்து இஸ்லாமிய ஆட்சியிலிருந்து வருகின்ற ஒருநாட்டிலே ஆட்சியிலிருக்கும் குடும்பத்தின் பொறுப்புள்ளவர்களின் லட்சணத்தைப் பார்த்தீர்களா? இஸ்லாமிய மதத்தின் இறுக்கமான சட்டங்களும் கொடூரமான தண்டனைகளும் ஏழை றிசானாக்களுக்கு மட்டும்தானா..?
பதில் கூறுங்கள் ஆன்மீகத் தூண்களே?
நாம் எத்தனை புனிதமாக கருதினாலும், அனைத்து ஆன்மீக நெறிகள் அனைத்துமே ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி உலகிலுள்ள பணக்கார அதிகார வர்க்கத்திற்கு சேவகம் புரியும் ஏவல் மிருகங்கள்தான் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்ளுங்கள்.