Header Ads



அக்குறணையில் ஏற்படும் வெள்ளத்திற்கு 2 வருடங்களுக்குள் தீர்வு - அமைச்சர் அமரவீர


(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரிற்கு வெள்ளத்தாள் ஏற்படும் பாதிப்புகளுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிரந்தர முடிவு கானப்டடும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று 2013 06 07 மாலை அக்குறணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துறையாடல் ஒன்றில் கலந்து கொண்டே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அக்குறணை நகரம் வெள்ளத்தால் மூழ்குவதை தவிர்ப்பது சம்பந்தமாக அக்குறணை வர்த்தக சங்க மற்றும் பொது அமைப்புகளது உறுப்பினர்களுடன் இக் கலந்துறையாடல் இடம் பெற்றது.

இங்கு மேலும் கறுத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர நாட்டின் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் பிரதேசங்களுக்கு நிரந்தர முடிவு கானப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பனித்திருப்பதாகவும் அதன் பிரகாரம் நிரந்தர தீர்வு கானப்படுவதாகவும் தெரிவித்தார்.

அக்குறணை நகரை வெள்ளத்தாள் பாதுகாப்பதற்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகக் கூறிய அமைச்சர் அதனை ஒரு வருடத்துக்குள் முழுமையாக நிரைவு செய்ய  முடியா விட்டாலும் இரண்டு வருடங்களுக்குள் நிரைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதே வேலை அமைச்சர் மஹிந்த அமரவீர அக்குறணை விலானகம பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படத்துவதற்காக 42 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு வேலைத் திட்டத்தையும் இன்று ஆரம்பித்து வைத்தார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக், அக்குறணை பிரதேச சபை தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான், அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.