அமெரிக்காவைச் சேர்ந்த 2 இஸ்லாமிய விரோதிகளுக்கு பிரிட்டன் நுழைய அனுமதி மறுப்பு
(Tn) அமெரிக்காவின் இரு இஸ்லாமிய எதிர்ப்பு செயற்பாட்டாளர்களை பிரிட்டனுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தீவிர வலதுசாரிகளின் பேரணியில் உரையாற்றுவதற்காக கடந்த புதன்கிழமை பிரிட்டனுக்கு வரவிருந்தனர்.
அமெரிக்காவில் இஸ்லாமிய மயமாகுவதைத் தடுப்போம் என்ற அமைப்பை தோற்றுவித்த ரொபட் ஸ்பென்ஸர் மற்றும் பமிலா கில்லர் லண்டனில் நடைபெறவுள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பான இங்கிலிஷ் டிபென்ஸ் லீக்கின் பேரணியில் பங்கெற்கவிருந்தனர். எனினும் ஸ்பென்ஸர் மற்றும் கில்லர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பிரிட்டன் உள்துறை செயலகம் அறிவித்தது.
இங்கிலிஷ் டிபென்ஸ் லீக் அமைப்பு ஆயுதப்படைகளின் தினத்தையொட்டி நாளை லண்டனில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த பேரணி கடந்த மாதம் இராணுவ வீரர் லீ ரிக்பி கழுத்து வெட்டி கொல்லப்பட்ட இடத்தில் முடிவடையவுள்ளது. லீ ரிக்பியின் கொலை இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல் எனக் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரிட்டனில் அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பென்சர் மற்றும் கில்லர், நியூயோர்க்கில் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிராகக் கடும் பிரசாரங்களை முன்னெடுத்து பிரபலமடைந்தவர்களாவர்.
Post a Comment