லிபியாவில் வன்முறை - 28 பேர் மரணம்
லிபியாவின் அதிபராக இருந்த முவம்மர் கடாபி, கடந்த 2011ம் ஆண்டு புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த புரட்சிப் படையினரின் தலைநகர் லிபியா தலைநகர் பென்காசி பகுதியில் உள்ளது. இந்த தலைமையகத்தை நேற்று ஆயுதமேந்திய ஒரு கும்பல் சுற்றிவளைத்தது.
தற்போதைய லிபியா அரசின் ஆயுத ஒடுக்குமுறை நடவடிக்கையில் கைக்கூலிகளாக இந்த புரட்சிப்படையினர் நடந்துக் கொள்வதால் தலைமையகத்தின் மீது அவர்கள் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் 28 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் அல்-ஜலாலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலையடுத்து லிபியா ராணுவத்தினர் அந்த தலைமையகத்தை கைப்பற்றி பாதுகாத்து வருகின்றனர். இங்கு ஏராளமான பேராயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment