Header Ads



சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - இருதரப்பிலும் 27 பேர் மரணம்

மேற்கு சீனாவில் உள்ள உரும்கி பகுதியில் வசிக்கும் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் அப்பகுதியை தங்களின் தாய்நாடு என்று கூறி உரிமை கோரி வருகின்றனர்.

தங்களின் மொழி மற்றும் மத உரிமைகளின் மீது சீன அரசு மேலாதிக்கம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.

மத்திய ஆசியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள போராளி குழுக்களின் ஆதரவுடன் கிழக்கு துருக்கிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டும் சீன அரசு இவர்களை ஒடுக்க தாக்குதல் நடத்தி வருகிறது.

உரும்கி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்று ஏற்பட்ட கலவரத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

அதே போல், இன்றும் உள்ளூர் மக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வெடித்த மோதல், கலவரமாக மாறியது.

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சேருவதற்குள் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் பலியாகினர்.

கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய கலவரத்தில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments

Powered by Blogger.