யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் அம்புலன்ஸ் சேவை
(பாறூக் சிகான்)
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையினரால் நோயாளர் அம்புலன்ஸ் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இச்சேவைக்கான கட்டணம் எதுவும் இல்லை.
வெளிமாவட்டத்திற்கும், கொழும்பிற்குமான சேவை கட்டணம் மிக குறைவாக அறவிடப்படும் என அறிவித்துள்ளது.
எனவே தமது சேவையை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் 0212222561,0213215555,எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும்,இச்சேவை 24 மணிநேரமும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ் செஞ்சிலுவை சேவை கிளையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment