ஐக்கிய அரபு இராச்சியத்தில் 200 இந்திய கொலை குற்றவாளிகள்..!
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புள்ளிவிபரப்படி 1200 பேர் அந்நாட்டின் சிறைகளில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 200 பேர் கொலை குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர்.
அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் இருநாடுகளுக்குமிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. சிறையில் உள்ள இந்தியார்கள் மீதமுள்ள தண்டனை காலத்தை சொந்த நாட்டிலேயே அனுபவிக்க அனுமதி அளிக்கும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஐக்கிய அரபு குடியரசும் கடந்த 2011-ம் ஆண்டு கையெழுத்திட்டன. இதனை நடைமுறைப்படுத்த கடந்த மாதம் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்த சிறையில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பெண்கடத்தல், பாலியல் தொழிலில் ஈடுபட பெண்களை கட்டாயப்படுததுதல் போன்ற ஒழுக்கம் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் இந்தியா திரும்பி சிறைகளில் தண்டனையைத் தொடர தயக்கம் காட்டி வருகின்றனர்.
வேலைக்குச் சென்ற இடத்தில் இது போன்ற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிப்பது அவமானமாக இருப்பதாகவும், தங்கள் சொந்தங்களை எதிர் கொள்ள வெட்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இந்தியா திரும்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.
Post a Comment