ஹஜ் கோட்டாவை சவூதிஅரேபியா 20 வீதமாக குறைத்தது - இலங்கையர் 2240 பேருக்கே வாய்ப்பு
உலக நாடுகளுக்கான ஹஜ் கோட்டாவை சவூதி அரேபிய அரசு 20 வீதமாகக் குறைத்துள்ளது. இதனால் இலங்கையில் இருந்து இம்முறை 2240 ஹஜ் யாத்திரிகர்களை மட்டுமே ஹஜ்ஜுக்கு அனுப்ப இயலும்.
சவூதி அரேபிய அரசாங்கம் 10/3/2013 ஆம் திகதியன்று ஹஜ்ஜுக்காக 2800 பேருக்கு அனுமதி வழங்கி இருந்தது. புதிய தீர்மானம் பற்றி, ஹஜ் விவகார அமைச்சர் கலாநிதி பந்தார் பின் முஹம்மது ஹஜர் நேற்று அமைச்சர் பெளஸிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
Post a Comment