Header Ads



2 வயது குழந்தைக்கு குருதிக் குழாயில் சத்திரசிகிச்சை - ஓமான் வைத்தியர்கள் சாதனை

(உமர் அலி)

ஒமான் நாட்டின் குருதிக் குழாயில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் (vasculer  surgions) உலகிலே மிகவும் அரிதான ஒரு சத்திர சிகிச்சையையை வெற்றிகரமாக  செய்து முடித்து உலக வரலாற்றில்  தடம் பதித்துள்ளனர்.

நீரிழிவு (DIADETIC ), உயர் குருதி அமுக்கம் (HYPERTENSION ), மிகை குருதிக் கொழுப்பு (HYPER CHOLESTEROLEAMIA ) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை  பொதுவாகத்தாக்கக் கூடிய ஒரு நிலைதான்  அப்டோர்மினல் அயோர்டிக் அனுரிசம் (ABDOMINAL AORTIC  ANURISM).வயிற்றறை ,இடுப்புக்குளி, மற்றும்  கீழ் அவயங்களுக்கு குருதியை கொண்டு செல்லும்  பெருநாடி    வயிற்றறை  பெருநாடி எனப்படும்.

வயிற்றையும் நெஞ்சையும் பிரிக்கின்ற  பிரிமென்றகடு (DIAPHRAM) இலிருந்து கீழ் செல்லும்  இது மிகவும் முக்கியமான ஒரு குருதிக்குழாயாகும். இதில் ஏற்படுகின்ற அசாமான்ய ஒரு விரிவடையும்  நிலையே  அப்டோர்மினல் அயோர்டிக் அனுரிசம் (ABDOMINAL AORTIC  ANURISM) எனப்படும்.

இரண்டு வயதுக்  குழந்தையொன்று  இந்தப்பிரச்சினையால்  அவதியுற்றுக்கொண்டிருந்தது.ஓமான் நாட்டில் சத்திர சிகிச்சைக்கு பிரபலமான கோலா மருத்துவ மனையைச் சேர்ந்த (KHAULA HOSPITAL ) குருதிக் குழாய் அறுவைச்சிகிச்சைக்  குழுவினர் (VASCULAR  SURGICAL  TEAM) இந்தக் குழந்தையை மேற்படி  நிலையிலிருந்து சத்திர சிகிச்சை மூலம்  காப்பாற்றியுள்ளனர்.  

குருதிக் குழாய் அறுவைச்சிகிச்சையின் சிரேஸ்ட நிபுணரான  டாக்டர் சுலைமான் அல்  சம்சி (DR .SULAIMAN  AL  SAMZI ) அவர்களது தலைமையில்  4 மணித்தியாலமாக நடைபெற்ற இச்ச்த்திரகிச்சை உலகில் இதுவரை செய்யப்பட்ட  நான்காவது செயன்முறையாகும். இதன்போது செயற்கையாக  தயாரிக்கப்பட்ட குருதிக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

செல்வம்  கொழிக்கும் வளைகுடா நாடுகளே  நவீன மருத்துவத்தின்  அரிய செயன்முறைகளை  முதன் முதலில் பரீட்சிக்கின்றன.

No comments

Powered by Blogger.