Header Ads



1948 இல் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் புதைகுழி கண்டுபிடிப்பு

1948 ஆம் ஆண்டு இஸ்ரேலியர்களால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

ஜாபா என்ற இடத்தில் கடந்த புதன் அன்று கட்டிட வேலைக்காக பூமியினைத் தோண்டும்போது பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு வசித்து வரும் 80 வயதான மீனவர் அதார் ஜைனப் கூறுகையில், ”1948 ஆம் ஆண்டு இந்த இடத்தில் ஏறத்தாழ 60 உடல்களை இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட 60 நபர்களைத் தான் அடக்கியதாக” தெரிவித்தார்.

”பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக முஸ்லிம் சம்பிரதாயப்படி தனித்தனியாக உடல்களை அடக்கம் செய்யாமல் ஒரு உடலுக்கு மேல் மற்றொரு உடல் என வைத்து மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டதையும்” அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

பாலஸ்தீனக் கிராமமாக இருந்த ஜாபா, இஸ்ரேலிய ராணுவம் மற்றும் யூத வலதுசாரி குழுக்களின் தாக்குதலின் காரணமாக யூதக் கிராமமாக மாறியது. 1950 ஆம் ஆண்டு இந்தக் கிராமம் டெல் அவிவ் நகரத்துடன் இணைக்கப்பட்டு டெல்அவிவ் ஜாபா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலியத் தாக்குதலின் காரணமாக ஏறத்தாழ 760,000 பாலஸ்தீனிய மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது inneram

1 comment:

  1. please change or correct the heading...heading must produce a proper meaning....but in your heading gives a real different meaning than what is on your article.

    ReplyDelete

Powered by Blogger.