Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 18 ஆவது வருடாந்த மாநாடு நாளை

(ஏ.எல்.ஜுனைதீன் + ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18 ஆவது வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி நாளை 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹொட்டலில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சட்ட மாஅதிபர் பாலித பெர்னாண்டோ பிரதம அதிதியாகவும் ஜாமிஆ நளீமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி   எம். ஏ.எம் சுக்ரி சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

    இம் மாநாட்டில் நாட்டுக்கும் ஊடகத் துறைக்கும் சேவையாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கெளரவிக்கப்படவுள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது. நாட்டின் கல்வித்துறைக்கு சிறப்பான சேவையாற்றிய மூத்த முஸ்லிம் அறிஞர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரிக்கு இங்கு விசேட கெளரவம் வழங்கப்படவுள்ளது.

   “மவ்பிம” பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க உதயன் செய்தி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்,கானமயில்நாதன் தினக்குரல் செய்தியாளர் எம்.ஏ.எம்.நிலாம், ஊடகவியலாளர்களான ஏ.எம்.ஏ.பரீத் ஏ.எம்.வைஸ் ஆகியோரும் கெளரவிக்கப்படுகின்றனர்.

    “முஸ்லிம் நீதிய” என்ற நூலை எழுதிய சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்திற்கும் இங்கு விசேட கெளரவம் வழங்கப்படவுள்ளது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான செய்யது அஹமட் மற்றும் டொமினிகன் குடியரசின் இலங்கைக்கான கவுன்சிலர் ஜெனரலும் ரன்முத்து ஹொட்டலின் தலைவருமான அல்-ஹாஜ் ஹபீபுல்லாவும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

   இம் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகாக் குழுவுக்கான தெரிவும் நடைபெறும் தலைவர் பதவிக்கு தற்போதய தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.