வங்கி ஊழியர் தூங்கியதால் விபரீதம் - 1,666 கோடி ரூபாய் தவறுதலாக பரிமாற்றம்
ஜெர்மனியில் வங்கி ஊழியர், கம்ப்யூட்டர் கீ போர்டு மீது, கை வைத்து தூங்கியதால், பல கோடி ரூபாய் தவறுதலாக பரிமாற்றமானது. ஜெர்மனியின் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர், ஓய்வு பெற்ற ஒருவரது கணக்கில், 5,000 ரூபாய் பணம் போடுவதற்காக, கம்ப்யூட்டரை இயக்கி கொண்டிருந்தார். கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருந்த போது, சற்று கண் அயர்ந்து விட்டார். இவரது கை, தவறுதலாக, கீ போர்டின் மீது பட்டு, 222, 222, 222.22 என, எண்கள் பதிவாகி கொண்டே இருந்தது. ஓய்வு பெற்ற வாடிக்கையாளரது கணக்கில், 5,000 ரூபாய் பரிமாற்றம் செய்ய பட வேண்டியது, 222, 222, 222.22 யூரோ என, பதிவாகி விட்டது. நல்ல வேளையாக, ஓய்வு பெற்ற நபர், பணம் எடுக்கவில்லை. சக வங்கி ஊழியர், வங்கி இருப்பை சரி பார்த்த போது, அதிர்ச்சியடைந்தார். 1,666 கோடி ரூபாய்க்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக, தூங்கிய ஊழியர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தவறு செய்த ஊழியரை, தொடர்ந்து பணியில் இருக்கச் செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment