16 முஸ்லிம்களை சுட்டுக்கொன்றவனுக்கு ஆயுள்தண்டனை - இதுதான் அமெரிக்க நீதி
கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் 16 பேரைக் காரணமின்றிச் சுட்டுக் கொலை செய்த அமெரிக்க இராணுவ சார்ஜன் ரொபேர்ட் பேல்ஸ் ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மரண தண்டனைக்குள்ளாவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்கானிஸ்தானியரிடையே இதனால் பெரும் ஏமாற்றமும் கோபமும் ஏற்பட்டுள்ளது. 39 வயதான பேல்ஸ் 16 பேரைச் சுட்டுக் கொன்ற குற்றத்தை வாஷிங்டன் நீதிமன்றில் ஏற்றுக் கொண்ட போதும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படாதது ஆப்கான் அரசியல் வட்டாரங்கள் உட்படப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பேலஸ் மரண தண்டனைக்குள்ளாவதை நான் காண விரும்புகிறேன். எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது” என்கிறார், பேல்ஸின் வெறியாட்டத்தில் தனது தாயை இழந்தத சமியுள்ளாஹ். இந்தச் சம்பவத்தில் சமியுள்ளாஹ்வின் மகள் ஸர்தானாவும் மகன் ரபியுள்ளாஹ்வும் படுகாயங்களுக்குள்ளாயிருந்தனர்.
இப்போது 12 வயதான ஸர்தானா ஒரு கையும் காலும் இயங்காத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
”நான் வீட்டுக்குச் சென்ற போது இரத்த வெள்ளத்தில் கிடந்த என் தாயாரைக் கண்டேன். எனது பிள்ளைகள் கூட இரத்தத்தில் நீந்திக் கொண்டிருந்தனர்” என்று சம்பவத்தை நினைவுகூர்கிறார் சமியுள்ளாஹ். “பேல்ஸ் மரண தண்டனைக்குள்ளாவதைத் தவிர வேறு எதுவும் என்னைத் திருப்திப்படுத்தாது” என்கிறார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 22 பேரில் அநேகர் பெண்களும் சிறார்களுமாவர். இறந்தவர்கள் அனைவரும் தலையில் சுடப்பட்டிருந்தனர். எம்4 ரைபிள் மற்றும் 9 எம்எம் பிஸ்டல் ஆகியவற்றால் இவர்கள் சுடப்பட்டிருந்தனர்.
இதே வேளை, பேல்ஸ் பத்து வருடங்கள் சிறையில் கழித்தபின் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன் என்று அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment