பெண்கள் தங்கள் வாழ்நாளில் 150 வகை முடியலங்காரங்கள் செய்கிறார்களாம்..!
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், 150 வகை முடியலங்காரங்களை செய்து கொள்வதாக, சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த, "டோனி அன்ட் கை' ஒப்பனையாளர்கள், 2,000 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இதில், 20 பேரில் ஒரு பெண், ஒவ்வொரு முறையும் தன்னுடைய முடியலங்காரத்தை மாற்ற விரும்புகின்றனர். பெரும்பாலான பெண்கள், தங்கள் தலைமுடியில் விதவிதமான அலங்காரங்களை செய்து பார்க்க விரும்புவதாகவும், தலைமுடி பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை, என்றும் கூறியுள்ளனர்.இன்னும் சிலர், ஓராண்டில், இரண்டு வகை முடி அலங்காரங்களை கண்டுபிடித்து விடுகின்றனர். அவர்களில் ஒருவர் தங்கள் முடியின் நிறத்தையும் மாற்றுகின்றனர்.
மேலும், 64 சதவீதம் பெண்கள், ஒரே விதமான முடியலங்காரத்தை செய்து கொள்ள விரும்பாததால் மாற்றுவதாகக் கூறியுள்ளனர். பிரபலமானவர்களின் முடி அலங்காரத்தை விரும்பி, அதே மாடலில், 12 சதவீதம் பேர், மாற்றிக்கொள்கின்றனர். தங்களுடைய திருமணத்திற்காக,15 சதவீத பெண்கள், முடி அலங்காரத்தை, மாற்றுகின்றனர்.திருமணமாகி குழந்தை பிறந்த பின்னும், 13 சதவீதம் பெண்கள் சிகை அலங்காரத்தை மாற்றுகின்றனர்.
பிறந்த நாள் தவிர விவாகரத்துக்கு கூட தங்கள் முடி அலங்காரத்தை மாற்றும் பெண்களும் உள்ளனர். இவ்வாறு, பெண்கள் தங்கள் வாழ்நாளில் பல்வேறு வகையான முடி அலங்காரங்களை செய்து கொள்கின்றனர். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment