15 இலட்சம் பேர் விசாவுக்கு விண்ணப்பம், 13.000 இலங்கையர்கள்
(Sfm) சவுதி அரேபியாவில் விசா அனுமதியின்றி தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை விசா பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வீசா அனுமதியின்றி சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தொடர்ந்து 13 ஆயிரம் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகளின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
சவுதி அரேபியாவில் ஆறு லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment