பாகிஸ்தானில் அம்மை நோயால் 148 பேர் மரணம்
பாகிஸ்தானில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய அம்மை நோயால் 148 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 குழந்தைகள் பலியாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாகூரில் மட்டும் சுமார் 80 பேர் அம்மை நோயால் இறந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் 195க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மை நோய் குறித்து விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தாததும், அதற்கான தடுப்பு ஊசிகளை முறையாக போடாததாலும் இந்த அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Post a Comment