Header Ads



உம்ரா விஸா இனிமேல் 14 நாட்களுக்கே - இன்று உடனடியாக அமுலுக்கு வருகிறது

உம்ரா விசா காலாவதியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித மக்கா பெரிய பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு முன் வெளிநாட்டு உம்ரா முகவர்களுக்கு அனுப்பிய சுற்று நிருபத்தின்படி, இந்த புதிய கட்டுப்பாடு இன்றைய தினம் (திங்கட் கிழமை)  10-06-2013 அமுலுக்கு வருகிறது.

ரமழான் காலத்தில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா செல்ல எதிர் பார்த்திருக்கும் பல முஸ்லிம்களுக்கு சவூதி அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது.

உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் போதுமான காலம் அங்கே தங்கியிருக்க எதிர்பார்த்தே பயண ஏற்பாடுகளை செய்கின்றனர். எனினும் எதிர்வரும் இரு மாத காலத்தில் மக்காவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய சுற்றுநிருபத்தின்படி உம்ரா பயணம் 14-14 என்ற சுழற்சியில் அமையும் என ரஹ்மான் அஸிஸ் விபரித்தார். “உம்ரா விசா பதியப்பட்டு 14 தினங்களுக்குள் குறித்த யாத்திரிகர் தனது உம்ரா பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதேபோன்று அவர் சவூதிக்கு வந்து 14 தினங்களுக்குள் வெளியேறி விட வேண்டும்” என அஸிஸ் கூறினார்.

No comments

Powered by Blogger.