மாடு வெட்டுவதும், கசினோவும் இப்போது முக்கியமல்ல - 13 ஐ இரத்துச் செய்வதே பிரதானம்
கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் நாட்டு மக்கள் பிறக்க உள்ள பிள்ளைகள் மீது பாசம் இருந்தால், முதலில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை கசினோ, மாடு அறுப்பது, மதுபானம் அல்ல எனவும் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எப்படி பாதுகாத்து கொள்வது என்ற சவாலே முக்கிய பிரச்சினையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கசினோ, பிரச்சினை, மாடு அறுக்கும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வரும் பிரச்சினைகள், எனினும் முதலில் அரசியல் பிரச்சினையை தீர்ப்போம். இதன் பின்னர் இரண்டு மற்றும் மூன்றாவது பிரச்சினைக்கு செல்வோம்.
மாநாயக்க தேரர் கசினோவுக்கு முதல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்ட போராட்டத்தில் இறங்க வேண்டும். இது இலங்கை மீது சுமத்தப்பட்ட பாரிய பாவ கர்மமாகும்.
கசினோவை நானும் எதிர்க்கின்றேன். கசினோ பிரச்சினையை எந்த சந்தர்ப்பத்திலும் தீர்த்து கொள்ள முடியும். ஆனால் தாய் நாடு கையை விட்டு சென்று விட்டால்தான் பிரச்சினை. அடுத்த சில மாதங்களில் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்காமல் வட மாகாண சபை தேர்தலை நடத்துவது ஆபத்தானது எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். gtn
யார் யாரோட மனசில துவேசம் இருக்கு என்பதை இந்த நேரம் கணக்கு போட்டு பார்த்து பட்டியல் போட்டு வைக்கலாம் இவங்க எல்லாரையும் நோட் பண்ணிவெச்சுக்குவம் இவங்கதான் சிறுபானமையினரை நசுக்க நினைக்கும் கொடியவர்கள்...
ReplyDelete