Header Ads



13 வது அரசியல் சீர்திருத்தமும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்

(ஜுனைட் நளீமி)

தற்போதய இலங்கை அரசியல் களநிலையில் மீண்டும் சிறுபான்மைக்கான களப்பரீட்சையாக 13வது அரசியல் சீர்திருத்த நடமுறை தொடர்பான அம்சம் விவாதப்பொருளாக அமைந்துள்ளது.. குறித்த 13வது திருத்தத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய அரச தரப்பு, அமைச்சரவை அமர்வொன்றினை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமக்கு ஒருவார கால அவகாசம் தேவை என கூறி வெளிநடப்பு செய்ததாகவும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஒருநாள் அவகாசம் தமக்கு தேவைப்படுவதாக  தெரிவித்ததாகவும்  செய்திகள் வெளியாகி இருந்தன. 

13வது அரசியல் திருத்த அமுளாக்கம் தொடர்பிலான கவனக்குவிப்புக்கு காரணம் என்ன.

தற்போதய அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றதாக பிரகடனப்படுத்திய போதும் நாட்டில் புறையோடிப்போன இனப்பிரச்சிணை முரண்பாடுகள் தொடர்ந்தும் பனிப்போராகவே காணப்படுவதுடன் சிருபான்மை பிரச்சிணைக்கான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தமும் எழுந்துள்ளது. யுத்தத்தில் வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளிடம் யுத்தத்தின் பின்னர் தமிழர் பிரச்சிணைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு வழங்கியிருந்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னரும் கூட சிறுபான்மைக்கெதிரான அச்சுருத்தல் நடவடிக்கைகள் மற்றும் இன்னோரன்ன பிரச்சிணைகள தொடர்ந்துவருகின்ற நிலையில்;; தமக்கான தீர்வினை சர்வதேசம் அவசரமாக  பெற்றுத்தரவேண்டும் என்ற உந்துதளை வலுவடையச்செய்துள்ளது.

அரசினைப்பொருத்தவரை சர்வதேச அழுத்தங்களுக்கப்பால் உள்ளக தீர்வுப்பொறிமுறையொன்றினை முன்வைக்கவேண்டிய இக்கட்டான தேவைப்பாடு தரூஸ்மன் அறிக்கையினைத்தொடர்ந்தும், ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தையடுத்தும்; காரணமாய் அமைந்தன. எனவே சர்வதேச தலையீட்டின் மூலம் போர்குற்றங்கள் மற்றும் இன்னோரன்ன பிரச்சிணைகள் தற்போதய அரசின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிவி;டக்கூடாதென்பதிலும் அரசு கவனமாக காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாகவே தென்னாபிரிக்காவினை முன்மாதிர்யாக கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை அரசு அமைத்து உள்ளக தீர்வு முயற்சியினை மேற்கொள்ள முனைவதாக கூறி சர்வதேசத்தின் வாயை சற்று அடைக்க முனைந்தது. எதுவும் இல்லை என்றாலும் இருப்பதில் இது பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஐ.நாவில் இறுதியாக நடந்த இலங்கை மீதான அமர்வில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையாவது குறைந்தது இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற திர்மானம் முன்வைக்கப்பட்டது. 

தனிநாட்டு கோரிக்கையிலிருந்து கட்ட பஞ்ஞாயத்து கோறிக்கைக்கு சிறுபான்மை போராட்டம் தள்ளப்பட்டுள்ளமை கவலைக்குறியதாகும். சிறுபான்மைப்பிரச்சிணைக்கு அதிகாரப்பகிர்வு சிறந்த முறையாக அமையும் என்று குறிப்பிட்டு உள்ளூராட்சி அதிகார சபைகளினூடாக அதிகாரப்பரவலாக்கம் அரசியல் தீர்வாக அமையுமென அரசின் எண்ணக்கிடைக்கைக்கு சாதகமாக நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துறை கொண்டுள்ளமை ஆணைக்குழுவின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இத்தகைய பிண்ணனியில் 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது ஓரளவு சிறுபான்மைக்கான காப்பீடாக அமையுமென கருதப்படுகின்றது.

13வது அரசியல் திருத்த நடைமுறை  சாத்தியப்பாடுகளும் 19வது திருத்த முன்மொழிவுகளும். 

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாகும். தனி நாட்டு கோரிக்கையிலிருந்து விடுதலைப்போராட்டத்தை விடுவித்து சுயாட்சி அதிகாரம் கொண்ட மாகாண சபை முறைமை இதன் மூலம் இலங்கையில் அமுழ்நடாத்தப்படுவதே நோக்கமாக அமைந்திருந்தது.  இந்தியாவில் கானப்படும் மாநில ஆட்சிக்கு சற்றும் குறைந்;ததான அதிகாரங்களுடனும், சிறுபானமை ஓரளவு தமது சுயட்சியை உறுதிப்படுத்துவதற்காகவும் இம்முறைமை இந்திய அரசினால் முன்வைக்கப்பட்டது. 

இவ்வரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக காணி;, பொலிஸ் அதிகாரம் என்பன இவற்றில் அடங்கும். அத்துடன் எந்தவொறு மாகாண சபையும் தமக்காண நிதி மூலங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று விதந்துறைப்புக்கள் காணப்பட்டது. இத்தகைய சரத்துக்கள் இலங்கையின் இறையான்மைக்கும், ஒற்றையாட்சித்தன்மைக்கும் பாதிப்பாக அமைந்து விடும் என்று குற்றச்சாடுக்களும் விமர்சனங்களும் சிங்கள மக்களிடம் முன்வைக்கப்பட்டதுடன், அப்போது வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட வரதராஜ பெருமால் இந்திய அமைதிப்படை வெளியேற்றத்தை தொடர்ந்து வடகிழக்கை தனி நாடாக பிரகடனப்படுத்திய வரலாற்றுத்தவரையும் காரணம் காட்டி மாகாண சபை முறைமையினை இடைநிருத்தியதுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாதென்ற கருத்தினையும் சிங்கள பெரும்பான்மை அரசுகள் முன்வைத்தன. இத்தகைய போக்கு இந்தியாவை சினத்துக்குள்ளாக்கும் என்ற அம்சங்களுக்கப்பால் இந்தியாவை ஓரளவாவது ஒத்துக்கொள்ள செய்யும் வகையில் சில மாற்றங்களுடன் 13வது திருத்த சட்ட மூலத்தை அமுழ்நடாத்த அரசு திட்டமிடுகின்றது. முற்றாக புறக்கனிக்கின்ற போது பிராந்திய வல்லரசாக கிழக்கே பார் கொள்கையில் கற்பனாவாதம் கொண்டிருக்கும் இந்தியாவை பகைத்துவிடுவதாக அமையும் என்பதில் அரசு ஓரள்வு தெளிவாகவும் உள்ளது. என்ற போதும் கேந்திர முக்கியத்துவத்தினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளுடன் உறவுகளை ஸ்தீரனப்படுத்திக்கொண்டு இந்தியாவை எச்சரிக்கும் நட்;புரவுடன் கூடிய அனுகும் வியூகத்தை இலங்கை அரசு கையாள முயற்சிக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில் இலங்கை சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் நெருக்குவாரங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை செய்தே வருகின்றது. சர்வதேச மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள 165 பரிந்துறைகளில் ஏறக்குறைய 80க்கும் மேற்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றது. குறிப்பாக மீள்குடியேற்றம் குறை நிலையில் இருக்கின்ற போதும் தற்போது மீள்குடியேற்ற செயற்திட்டம் நிறைவுபெற்றுள்ளதாக அரசு அறிவிப்புச்செய்து ஆண்டுகள் கடந்து விட்டன. அதே போன்று சுயாதீன நீதிச்சேவை, பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல டுடுசுஊ பறிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதக அரசு குறிப்பிடுகின்றது.  

எதனையாவது தீர்வுத்திட்டமாக முன்வைக்க வேண்டிய அழுத்தத்திற்குள் அரசு தள்ளப்பட்டிருக்கின்றது. என்றபோதும் சர்வதேசத்தையும் உள்நாட்டின் அரசியல் தளத்தையும் திருப்தியுர செய்வதற்கான செயல் திட்டங்களை அரசு ஏற்படுத்திவருகின்றது. இந்தவகையில் இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் பெரும்பானமை தேசிய வாதத்திற்கும் எதிரானதாக கருதும் 13வது திருத்த சட்ட மூலத்தை திருத்தங்களுடன் 19வது திருத்த சட்ட மூலமாக அமுழ்ப்படுத்த அரசு திட்ட மிடுகின்றது. இதன் மூலம் 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் மத்திய அரசு அதிகார மைய குவிப்பு செய்யும் வகையில் மாற்றங்களை செய்ய எத்தனித்து வருகின்றது. இந்தவகையிலே திவிநெகும சட்ட மூலம் அரசினால் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் உள்ளூராட்சி நிருவனங்களுக்கு கூட இருந்த அதிகாரங்கள் மத்திய அரசுக்கு கைமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் மாகாண சபையானது ஒரு செல்லாக்காசாக மாறுவதற்கும் வாய்பாக அமைந்துவிட்டது. இதனை டுடுசுஊ சூட்சகமாக ஊக்குவிப்பதனை கானமுடியும். டுடுசுஊ தனது பறிந்துறைபில் குறிப்பிடப்பட்டுள்ள 'இரண்டாவது சபை உள்ளூராட்சி சபைகளின் வாயிலாக அதிகாரப்பரவலாக்கம்' என்ற பதம் குறித்து நிற்கின்றது. எனவே தனியான சுயாதிக்க மாகாண சபை என்ற கறுத்துக்கப்பால் சமூகமட்ட அதிகாரப்பரவலாக்கம் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்டமூலங்கள் சிறுபான்மை காப்பாக அமையுமா என்ற கேள்வியை எழுப்புவதுடன் திவிநெகும போன்றசட்ட மூலங்கள் நிறைவேற்றப்படுவதற்கு பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை கைவிடாது என்ற அதீத நம்பிக்கையும் தமிழ்த்தரப்பு முஸ்லிம்கள் விடயத்தில் புறக்கனிப்புடனும் செயற்பட்டமையும் காரனமாகியது என்ற நியாயம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்று பெரும்பானமை குறித்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் மீள்வாசிப்பு தேவையாகவுள்ளதுவும் குறிப்பிடத்தக்கது.

திவிநெகும சட்ட மூலம் நிரைவேற்றப்பட்டதனால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரங்கள் பெரும்பானமை மத்தியரசின் கைக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மாகாண சபைக்கான அதிகாரங்களை வரையருப்பதிலும்; மாகாண சபைகளை இணைப்புச்செய்வதற்குமான ஒரே வழியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை காணப்பட்டது. எனவே இணைந்த வடகிழக்கு எனும்போது தமிழ்த்தரப்புக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு கானப்படுவதை நன்கு உணர்ந்த அரசு இனைப்பிணை ஜனாதிபதி அதிகாரத்தினூடாக செய்யும் ஒரே சந்தர்ப்பத்தையும் இல்லாதொழிப்பதற்கான சட்ட்மூலத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதனடிப்படையில்தான் கடந்த 2013.06.06ம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைகளை ஒன்றினைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை இரத்துச்செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொன்டதும் குறிப்பிடத்தக்கது. இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுமானால் இந்திய அழுத்தங்களுக்கோ சர்வதேச அழுத்தங்களுக்கோ அடிபனிந்து தமிழர் தாயகப்பகுதியில் பாறிய நிர்வாக பிரதேசத்தை இணைத்து வழங்காமல் நழுவிக்கொள்வதற்கான வியூகமாக இது அமையும். 

பிரிந்த கிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை கானப்படுகின்ற போதும் மாகாண சபைஇ ஆட்சி அமைக்கும் எந்த தரப்பினலும் அதிகப்பெரும்பான்மையாகவன்றி ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலைப்பாடும் நன்கு உணரப்பட்டுள்ளது. தமிழ்த்தரப்பு போன்றல்லாது முஸ்லிம்கள் மத்தியில் கானப்படும்  பல்வேறு அரசியல்குழுக்கல் தனியான முஸ்லிம் பெரும்பானமையை ஏற்படுத்த தடையாகவே அமையும். அதே போன்று வடக்கிலும் இத்தகைய கள சூழ்நிலையே அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழர் கூட்டணிக்குள் உள்ள உள்ளக முரண்பாடுகள், மற்றும் அரச சார்பு தமிழ் அரசியல் கட்சிகள் எனபன தமிழர் பெரும்பானமை கொண்ட ஒரேகட்சி அதிகாரத்தினை வட மாகாண சபை தேர்தல் ஒன்று நடக்குமானல் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவேதான் அரசு வடகிழக்கு இணைப்பினை முற்றாக சாத்தியமற்றதாக மாற்றும் நடவடிக்கையினை முன்னெடுக்கின்றது. அதே போன்று 19வது சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை அரச கூட்டணிக்கட்சிகள் அறிக்கை போர்களை விட்ட போதும் இறுதியில் அவை திருத்தத்திற்கு சார்பாகவே நடந்துகொள்ளூம் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது. நிறுபான்மைக்கான காப்பீடு தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் இல்லாத நிலையில் தமது பதவிகளுக்காகவும் சுயலாபங்களுக்காகவும் சமூகத்தை அடமானம் வைக்கும் நிலை உறுவாக வாய்ப்புண்டு. 

எனவே எஞ்சியுள்ள குடுக்கையளவு தன்னாதிக்க அதிகாரத்தையும் சிறுபான்மை இழந்து விடுமோ என்ற கேள்விக்கு விடை சிறுபான்மைக்கட்சிகளின் தீர்மானத்திலேயே அமைந்துள்ளது.

1 comment:

  1. JUNAID SIR, Thangalathu arasiyal vmarsanangal ithupontru innum varavendum.

    ReplyDelete

Powered by Blogger.