Header Ads



மு.கா.விலிருந்து பல்டியடித்தவர் மத்திய மாகாண சபையில் 13 க்கு ஆதரவாக வாக்களிப்பு

13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு மத்திய மாகாண சபை ஆதரவளித்துள்ளது. இதற்கான பிரேரணை மத்திய மாகாண சபையில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட போது பிரேரணைக்கு ஆதரவாக 30 வாக்குகள் கிடைத்தன.

ஆளும் தரப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

  எதிர்க்கட்சியினர்இ  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்களிப்பின் போது அவையில் பிரசன்னமாய் இருக்கவில்லை.

இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி கூறியதாவது,

மத்திய மாகாண சபையில் மர்ஜான் ஹாஜியார் என்பவர் முன்னர் முஸ்லிம் காங்கிரஸினை சேர்ந்தவராகத்தான் இருந்தார். ஆனால் கடந்த தேர்தரலில் அவர் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டமை காரணமாக நாம் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம் என்றார். எனவே அவரை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக கொள்ளமுடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. எந்தத் தேர்தலானாலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக்கேட்கவேண்டும் . கூட்டணி வேண்டாம் .

    ReplyDelete

Powered by Blogger.