13வது திருத்தச்சட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தவறு விடக்கூடாது
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சிறுபான்மைச் சமூகத்தின் ஆகக்குறைந்த பட்சமான உரிமையை பாதுகாக்கக் கூடிய 13வது திருத்தச் சட்ட மூலத்தினை இல்லாதொழிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஆதரவளிக்கக் கூடாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆகக் குறைந்த பட்சம் உரிமையை வழங்கக் கூடிய 13வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் இல்லாதொழித்து சிறுபான்மைச் சமூகங்களுக்குறிய குறைந்த பட்ச உரிமையும் தட்டிப்பறித்தெடுத்து அடிமைப்படுத்த முயற்சித்து வருகின்றது அதற்கான ஒரு பிரேரணையையும் மிக விரைவில் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் அல்லது நீதிமன்றதிற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது அதனை ஓரு போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கக் கூடாது.
இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசின் பங்காளிக் கட்சியாக பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பொறும்பான்மை கொடுத்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மைச் சமூகத்திற்கு அநீதியை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரிவு வழங்கக் கூடாது சிறு பான்மைச் சமூகத்தின் உரிமையை வென்றுதர வேண்டிய தார்மீக பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸிற்கு இருக்கின்றது ஆனால் உரிமையை வென்றுதரா விட்டாலும் இருப்பதை இல்லாமல் செய்வதற்கு ஒரு போதும் துணை போகக் கூடாது.
இவ்வாரே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் 17வது திருத்தச் சட்டத்திலிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை முழுமையாக தாரைவார்த்துக் கொடுத்ததுடன் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாபதியாக பதவி வகிக்க முடியாது என்ற சட்டத்தை திருத்தி ஒருவர் எத்தனை தடவையேனும் ஜனாபதியாக பதவி வகிக்கலாம் என்ற புதிய சட்டத்தை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர் காலத்தில் இனியெப்போதும் நீக்க வாய்ப்பே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று திவிநெகும சட்டத்தினை பாரளமன்றத்தில் நிறைவேற்றுவதாயின் மாகாண சபைகளின் ஒப்புதல் பெற்பபடவேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக கிழக்கு மாகாண சபையின் ஆதரவினை பெறுவதற்கு அரசாங்கம் இரு தடவைகள் பகிரதபிரயத்தனம் செய்தபோது தமிழ் ஒருவர் அரச சார்புள்ள முதலமைச்சராகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் கட்சியாகவும் இருந்து அதனை முழுமையாக நிராகரித்து இருந்தனர்.
ஆனால் இன்றைய கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸின் முழுமையான ஆதரவுடனான முதலமைச்சராக தெரிவாகி முதலாவது அமர்வின் போதே முஸ்லிம் காங்கிரஸின் முழுமையான ஆதரவுடன் குறித்த திவினகும சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்று எதிர் கட்சியாக இருந்த போது பிழையென நிராகரித்து பிரேரணை சமர்ப்பித்து சபை அமர்வுகளை பகிஸ்கரித்து தடுத்து நிறுத்தப்பட்ட அதே திவிநெகும சட்டமூலம் இன்று ஆளும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறிய போது சரியென கண்னை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கியதன் மூலம் கிழக்கு மாகாண சபையின் உரிமைகளை அரசிற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 13வது திருத்தச் சட்டமூலமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரத்தினை இல்லாமல் செய்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக காணப்படும் சிறுபான்மைச் சமூகங்களை திட்மிட்ட குடியேற்றத்தின் மூலம் சிறுபான்மையாக மாற்றியமைப்பதற்கான திட்டத்தை அரசு மேற்கொள்ளப் பார்க்கின்றது
அடுத்ததாக பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்படபோகின்றது அவ்வாறு பொலிஸ் அதிகாரம் பறிக்கப்படும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டம் ஒழுங்குகள் சீர்குலைந்து நீதியே கேள்விக்குறியாகி போகக் கூடிய நிலை ஏற்படும்.
13வது திருத்தச்சட்டம் இல்லாமல் செய்யப்படுகின்ற போது திவிநெகும போன்றதொரு சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மாகாண சபைகளின் ஒப்புதல் அல்லது அங்கிகாரம் தேவையில்லை
அதுபோன்று இரண்டு மாகாண சபைகள் விரும்பினால் இணைந்து செயற்படலாம் என்ற சட்டம் , கல்வி அதிகாரம் போன்றவைகள் இல்லாமல் செய்யப்படப்போகின்றது இவ்வாறு சிறுபான்மையினரை பாதிக்கக் கூடிய எத்தனையோ சட்டங்கள் 13வது திருதச் சட்டம் இல்லாமல் செய்யப்படுவதன் மூலம் பறித்தெடுக்கப் படப்போகின்றது.
இதனை அரசாங்கம் வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது பாராளமன்றத்திற்;கு கொண்டு சென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாது போனால் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று 13வது திருத்தச்சட்டத்தை இல்லாமல் அல்லது தேவைக்குயேற்ப திருத்தயமைப்பதற்கு முயற்சிக்கின்றது. இவ்வாரான சிறுபான்மையினரை பாதிக்கக் கூடிய விடயங்களில் மிகவும் விழிப்பாக இருப்பதுடன் கடந்த கால தவறுகளை 13வது திருத்தச்சட்டத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தவறு விட்டாலும் இவர்கள் ஒரு போதும் அக்கட்சியை விட்டு விட மாட்டார்கள்
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
தம்பி றமழான் நீங்க எப்படி கூப்பாடு போட்டாலும் சரி, முஸ்லிம் சமூகத்துக்காய் கீரிட்டுக்கத்தி செத்து மடிந்தாலும் ,எங்கள் சொத்துகள்(கார்ணிவல் ஐஸ்கிறீம்உட்பட) பட்டம் பதவி புகழ் படாடோபம் அந்தஸ்த்து சுகம் அனைத்தையும் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் ,முஸ்லிம்களை மட்டுமல்ல ,முஸ்லிம்களின் உயிரிலும் மேலான குர் ஆனையும் ஏன் படைத்த அல்லாஹ்வையும் கேடையமாகப்பயன்படுத்துவோம்.உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கோ.மிஞ்சி போனால் என்ன செய்வீங்கோ கர்தால் பண்ணிவீங்க .எங்களுக்குத்தெரியாத சமூக உளவியலா, சகலதையும் படித்து பணியாரம் சுட்டு ,சகல ஓதலையும் ஓதி ஒறட்டியும் சுட்டு, வச்சிருக்கோமில்ல.செய்றதெல்லாம் செய்வோம் பின்பு தேர்தல் காலம் வந்து, தொப்பியபோட்டு பிஸ்மியுடன் (தலைவர்பாணியில்)கணீரென்ற குரலில்பேசி, ஆயிரம்விளக்கு ஆதவன்பாட்டு லவுஸ் ஸ்பீக்கரில போட்டா ,நீங்களெல்லாம் உணர்ச்சி நட்சத்திரமாகி எங்களுக்கு ஓட்டு போடுவீங்க . இதுதான் நடக்கும்.ஏனெண்டா நீங்களெல்லாம் சொரணையற்றவர்கள்.
ReplyDelete