13 வேண்டாமென அணிதிரளும் பௌத்த அமைப்புக்கள் - மிரட்டும் முஸ்லிம் காங்கிரஸ்
13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளைமறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவுக்கும், கடும்போக்குடைய சிங்களத் தேசிய அமைப்புகளுக்குமிடையில் இந்த முக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுபலசேனா, சிஹல ராவய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள தேசிய சங்கம், தர்ம விஜய நிதியம, ராவண பலய உள்ளிட்ட சகல சிங்கள பௌத்த அமைப்புகளும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளன. ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும், மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
இச்சந்திப்பின்போது அரசமைப்பிலிருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கக்கோரும் ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணை, வடக்குத் தேர்தல், மிருகவதைத் தடைச் சட்டவரைவு, வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உட்பட முக்கிய பல விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்படும் என அறியமுடிகின்றது.
அதேவேளை, சிங்கள, பௌத்த அமைப்புகளிடம் மேற்படி விடயங்கள் சம்பந்தமாகக் கருத்துக் கேட்டபின்னர் அவற்றை அறிக்கை யொன்றாகத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஹெல உறுமய உத்தேசித்துள்ளது என்றும் தெரியவருகின்றது.
குறிப்பாக, தமது கோரிக்கையை ஏற்காது அரசு வடமாகாண சபைத் தேர்தலுக்கு செல்லுமானால், அவ்வேளையில் தாம் எடுக்கவுள்ள முடிவு தொடர்பிலும் பௌத்த அமைப்புகளுக்கு இச்சந்திப்பின்போது ஹெல உறுமய உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அரசமைப்பிலிருந்து 13ஐ அகற்றுமாறு அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு மேற்படி அமைப்புகளிடம் ஹெல உறுமய கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து தமது கட்சி வெளியேறும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது. இதுகுறித்து முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப் தீன் கருத்து வெளியிடுகையில்,
முஸ்லிம் காங்கிரசின் உயர் சபை இது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தது. அதிகாரப்பகிர்வைப் பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எல்லோரும் வாய்ச்சொல்லில் வீரர்கள் எவருமே வெளியேற மாட்டார்கள் எல்லாம் நாடகம் ஜனாதிபதி இன்று பாக்கு வெட்டியில் நடுவில் அகப்பட்ட பாக்கு மாதிரி உள்ளார் ஒருபுறம் இந்த முட்டாள் கூட்டம் தனது மன சாட்சிக்கு மாறகவே தமிழ் பேசும் இரண்டு சமூகத்திகும் எதிரான இன வெறியர்களான இந்த காட்டுமிராண்டி கூட்டம் மறு முனையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள், ஈரானில் எண்ணெய் வாங்க அமரிக்கா விதித்த ஒரே ஒரு சிறிய தடையில் இருந்து இன்னும் நமது நாடு விடுபடவில்லை அடுத்த ஜெனீவா மகா நாட்டிற்கு முன் ஜனாதிபதி நாட்டிற்காக செய்யவேண்டிய பல கடப்பாடுகளை நன்றாகவே உணர்ந்து உள்ளார்! கடன் சுனாமியில் நாடு மூழ்கி உள்ள நிலையில் இந்த நாட்டின் எதிர்காலம் ஜனாதிபதியாகிய ஒரு தனிமனிதரின் கையில் தங்கி உள்ளது பாப்போம் நாடு இனவாதிகள் கையில் சிக்குண்டு சின்னா பின்னமாகி மீண்டும் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு முகம் கொடுக்க போகிறதா? அல்லது ஒரே நாடு ஒரே தேசம் எல்லரும் இந்த நாடு மக்கள் என்ற என்னத்தை மேலோங்கச்செய்து சுபீட்செமான ஒரு வளம் கொழிக்கும் நாட்டிற்கு வழி அமைக்கப்போகிராரர???
ReplyDeleteஒன்று மட்டும் உறுதி யார் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் அரசிலிருந்து வெளியேறாது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஹக்கீமும், ஹசன் அலியும், மட்டுமே வெளியேறுவார்கள் மற்ற அனைவரும் அமைச்சராக அல்லது பிரதி அமைச்சராக மாறுவார்கள்.
பொறுத்து இருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்!
Make sure Rauf does not have any secret plan with MR.
ReplyDeletemudivaana visayamellam eatkanave mudivusiyappattathu.poanamaatham arsaivittu vilahamaattom endru sonnadu enna duuppa. yarukku kaadu kuthureenga?
ReplyDeletemaahana safai emakku thevai illa
ReplyDelete