Header Ads



13 தொடர்பில் அரசாங்கத்திற்குள் 2 அணிகள்

அரசமைப்பில் குறிப்பாக 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக அரசு தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. எனினும் அரச கூட்டுக்குள் 13 இற்கு ஆதரவான அணி ஒன்று விஸ்வரூபம் எடுத்து வருவதுடன், தமது நடவடிக்கைகளையும் அந்த அணி தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.   

இதற்கமைய சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் என 13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவான தரப்பினர் திரைமறைவில் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.   மேற்படி தரப்பினர் ஆரம்பத்தில் "13' ஐ பாதுகாக்க தனித்தனியே குரலெழுப்பி வந்தனர். ஆயினும் "13' ஐ ஒழிக்க நினைப்போரின் நடவடிக்கைகள்  உக்கிரமடைந்துள்ளதால், இதுவிடயத்தில் அரசுக்கு கடும் அழுத்தத்தை பிரயோகிக்கும் நோக்கில் 13 க்கு ஆதரவானோர் ஓரணியில் திரளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த அணி, "13' விவகாரம் குறித்து திடமானதொரு தீர்மானத்தை தமக்குள் மேற்கொண்ட பின்னர், எதிர்க்கட்சிகளுடனும், 13' ஐ பாதுகாக்கும் ஏனைய அமைப்புகளுடனும் பேச்சுகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது எனவும் அறியமுடிகின்றது.  un

No comments

Powered by Blogger.