இஸ்லாமிய போராளி குழு தலைவரின் தலைக்கு 120 கோடி ரூபா நிர்ணயம்
நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக போராடி வருகிறது. அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதலையும் நடத்தி வருகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டுமுதல் இவர்கள் நடத்தி வரும் தாக்குதலுக்கு அங்கு 2000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போகோ ஹராம் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 120 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அல்ஜீரிய அல்கொய்தா மொக்தர் பெல்மோக்தர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 84 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இவர்கள் கடந்த ஜனவரி மாதம் எரிவாயு ஆலையில் இருந்த அமெரிக்கர்கள் உள்பட 37 பேரை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று இன்னும் அல்கொய்தாகள் சிலரின் பட்டியலையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்க வாதிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
Post a Comment