Header Ads



பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுத குண்டுகள், இந்தியாவிடம் 110

பாகிஸ்தானிடம், 120 அணு ஆயுதங்கள் உள்ளதாக, சுவீடன் நாட்டு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டின், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அணு ஆயுத தயாரிப்பு குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மேம்படுத்தப்பட்ட, அணு ஆயுதங்களை தயாரிக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா, தனது ராணுவத்தில், 10 சதவீதத்திற்கும் அதிகமான அணு ஆயுதங்களை சேர்த்துள்ளது. இதற்கு முன், இந்திய ராணுவத்திடம், 90 அணு ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை, 110 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று, பாகிஸ்தான், தன் அணு ஆயுத இருப்பை, 10 சதவீதம் வரை உயர்த்தியதன் மூலம், அணு ஆயுத எண்ணிக்கை, 100லிருந்து, 120 ஆக அதிகரித்து உள்ளது. சீனா, தன்னிடம் இருந்த, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை, 240ல் இருந்து, 250 ஆக உயர்த்தி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் விஞ்ஞானிகள், தங்கள் நாட்டு ஏவுகணையின் வேகத் திறனை அதிகரிப்பதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.


2 comments:

  1. ஏன் அமரிக்காவினதும் இஸ்ரேல் இனதும் அணு ஆயுதங்கள் பற்றி யாருமே ஆராய்ச்சி டனத்துவது இல்லையோ

    ReplyDelete

Powered by Blogger.