Header Ads



லண்டனில் பள்ளிவாசலுக்கு தீ - இதுவரை 11 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

(tn) சந்தேகத்துக்கு இடமான தீ விபத்து காரணமாக வடக்கு லண்டனில் இருக்கும் பள்ளிவாசல் ஒன்று முற்றாக தரைமட்டமாகியுள்ளது. இது திட்டமிட்ட முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை எனக் கருதப்படுகிறது.

சோமாலிய முஸ்லிம் சமூகத்தினர் வாழும் முஸ்வெல் ஹஸ்லில் இருக்கும் அல் ரஹ்மான் இஸ்லாமிய மைய இரண்டு மாடி கட்டடம் கடந்த புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் தரைமட்டமாகி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது சந்தேகத்திற்கு இடமான தாக்குதல் என ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் கூறியுள்ளனர். லண்டனில் கடந்த மாதம் இராணுவ வீரர் ஒருவர் பட்டப்பகலில் தீவிரபோக்குடைய முஸ்லிம்கள் இருவரால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரிட்டனில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மேற்படி பள்ளிவாசலும் தீக்கிரையாக் கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. தீ விபத்திற்கு உள்ளான பள்ளிவாசலில் இஸ்லாமிய எதிர்ப்பு இங்கிலிஷ் டிபென்ஸ் லீக்கின் சுறுக்கமான ‘ஈ. டி. எப்’ என்ற எழுத்துக்கள் கிறுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இராணுவ வீரர் கொலைச் சம்பவத்திற்கு பின் ஈ. டி. எல். இன் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

எனினும் இந்த செயலை தாம் செய்யவில்லை என ஈ. டி. எப். தலைவர் டொம்மி ரொபின்ஸன் கூறியுள்ளார். “இது அப்பாவி பொதுமக்களின் உயிரை அபாயத்திற்கு உள்ளாக்கும் செயலாகும். பள்ளி வாசலையோ, முஸ்லிம்களையோ தாக்க வேண்டாம் என எமது உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறினார்.

இராணுவ வீரர் கொலை சம்பவத்திற்குப் பின்னர் பிரட்டனில் சுமார் 212 முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகள் பதிவாகி இருப்பதாக அது தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடும் டெல் மாமா திட்டம் குறிப்பிட்டுள்ளது. இதில் 11 பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. WHEN A CRIME IS COMMITTED IN THE NAME OF ISLAM, WE SHOULD EXPECT RETALIATIONS LIKE THIS. SUCH ACTS BY PEOPLE WHO CALL THEMSELVES MUSLIMS COULD DO MORE HARM THAN GOOD FOR THE ENTIRE MUSLIM UMMAH.

    ReplyDelete

Powered by Blogger.