Header Ads



ரவூப் ஹக்கீம் Vs கோத்தபய ராஜபக்ஸ


(Mohamed Sadakathulla Fasly)

ஆஸாத் சாலி விடுதலையான தினத்துக்கு முந்தைய தினம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கும் இடையில் ஆஸாத் சாலி  கைது தொடர்பில் தொலைபேசியூடாக வாய்த்தகராறு ஒன்று இடம் பெற்று இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இது

முஸ்லிம் கோங்கராஸ் தலைவர் ஹக்கீமுக்கும் பாதுகாப்புச்செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

முஸ்லிம் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் அஷாத் ஸாலி அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து செய்யப்பட்டமை, கைது செய்தமைக்கான காரணம் நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் தான் கூட அறிந்திருக்க வில்லை என்று ஹகீம் அவர்கள் மீடியாவுக்கு வழங்கிய செவ்வியினால் இவ்வாயித்தகராறு இடம்பெற்றுள்ளது.

மீடியாவுக்கு வழங்கிய கருத்துக்கள் சம்பந்தமாக பாதுகாப்பு செயலாளர் ஹகீமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தனது அதிருப்தியை தெரிவித்த போது இந்த சூடான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த வாக்குவாதத்தின் பின்னர் புலனாய்வுத் துரையின் அதிகாரி ஒருவர் ஹக்கீமின் வீட்டுக்கு சென்று அசாத் ஸாலி கைது செய்தமைக்கான காரணத்தை விலக்கி யுள்ளார் .

13 comments:

  1. Can a secretary of the defense ministry question justice Minister. What types of administrative system prevail in Sri Lankan Government?

    ReplyDelete
  2. Yes it is in the island called "Rajapukistan'

    ReplyDelete
  3. My understanding, All Ministers comes under Defense with security issues. Hence, Defense Authority have rights to question against all security threat regardless Justice Ministry or any other Ministry. Ministry of Defense to secure All Island.

    மாறாக, எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் சமூகமாக நாம் இல்லை
    என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  4. எவ்வளவு வேகமாக இந்த ஆட்சி கலைக்கபடவேண்டுமோ அவ்வளவு வேகமாக கலைக்கப்டுவது மக்களுக்கு நல்லது. இதைத்தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete
  5. அப்படி என்ன காரணத்தை புலனாய்வுத் துறை அதிகாரி விளக்கினார் என்று ஹகீமிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன். Please www.jaffnamuslim.com

    ReplyDelete
  6. கோத்தபாய செய்ற அடாவடித்தனங்களையும் செய்துவிட்டு அதைமறைப்பதற்கு மற்றவர்களை எச்சரிப்பதும் பயம காட்டுவதும். அந்தக்காலம் மலையேறிக்கொண்டிருக்கின்றது.

    எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ்மீது எதுவிதமாற்றமும் எமக்கில்லை முஸ்லிம்களுக்கு ஆதரவில்லாத முஸ்லிம்காங்கிரஸை நாம் எப்படி ஆதரிப்பது. இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

    ReplyDelete
  7. நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் ஆஸாத் சாலியின் கைது பற்றி நாடாளுமன்றத்திலா பேசினார்? இல்லையே..

    அவர் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைச் சுருட்டுவதற்கு ஒரு ஆரம்பத் தூண்டிலைப் போட்டு விட்டு வந்திருக்கின்றார்.

    இதையெல்லாம் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கண்ணுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு காரியமாற்றிவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கணக்கில் எடுத்திருக்கத் தேவையில்லை.

    'நாங்கள் இனவாதிகள்தான்! மத வாதிகள்தான்! உலகில் எந்த நாட்டுக்கும் போவோம்! எங்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது! நாங்கள் சீருடை அணியாத பொலீஸ்காரர்கள்! இன்னும் பலரை இந்தப் படையணியில் சேர்ப்போம்' என்றெல்லாம் பகிரங்கமாக பல பிரதான நகரங்களிலும், ஊடக அறிக்கைகளிலும் கருத்துக்களை முன்வைத்து வரும் பொது பல சேனா முக்கியஸ்தர்களை பெருந்தன்மையுடன் கண்டு கொள்ளாமலும், கணக்கில் எடுக்காமலும் பாதுகாப்புச் செயலாளர் இருந்து வருவதைப் போலவே அமைச்சர் ஹக்கீமின் பேச்சு குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

    ஆனால் வட மாகாண சiபாத் தேர்தலுக்கு முன்னராக அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்து இவ்வாறு பேசியதும், அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இப்படி தூக்கிப் பிடித்துக் கண்டித்து வாய்த்தர்க்கப்பட்டிருப்பதும், இதை சாட்டாக வைத்து அரசுக்கும் மு.காவுக்கும் இடையில் ஒரு முறுகல் ஏற்பட்டிருப்பது போன்று முஸ்லிம் சமூகத்திற்கு காட்டவும், இதனை அடிப்படையாக வைத்து வடக்குத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடவும், சகோதரர் ஆசாத் சாலியின் கைது குறித்து தான் ஆட்சேபனை தெரிவித்ததை தூக்கிப்பிடித்து பிரச்சாரம் செய்யவும் ஒரு முன்னேற்பாடு நடப்பது போல் எனக்குப்படுகிறது.

    இப்படித்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நெருங்கிய வேளையிலும் காத்தான்குடி இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் வைத்து தம்புள்ள பள்ளிவாசல் விடயமாக அமைச்சர் ஹக்கீம் பேசி அத்தேர்தலில் தனித்துக் கேட்பதற்கான ஒரு முன்னேற்பாட்டை மக்கள் மயப்படுத்தியிருந்தார்.

    எதற்கும் வடபுல முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  8. super aa sonninga habeeb

    ReplyDelete
  9. ஹபீப் ஜமால்தீன் அவர்களே இதுதான் குடும்ப அரசியல், அவர்கள் நினைத்தால் யாரைவேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். பிரதம நீதியரசருக்கு நடந்தது என்ன.

    ReplyDelete
  10. Renees MHM, I agree with you...

    ReplyDelete
  11. Rajapaksa is trying to be HITLER and SADAM HUSAIN

    ReplyDelete
  12. exactly said by rahmathulla

    ReplyDelete

Powered by Blogger.