Header Ads



IPL கிரிக்கெட் சிறுவனையும் கொலை செய்யும்..!


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பேரத்தில் பணமிழந்த எம்.பி.ஏ மாணவன், தன் உறவினர் மகனைப் பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சட்டத்துக்கு விரோதமான வகையில் ஆட்டத்துக்கு வெளியே சூதாட்டம் நடக்கிறது. இச்சூதாட்டத்தில் எம் பி ஏ மாணவரான ஹிமான்ஷு ரங்கா ரூபாய் 30 லட்சம் இழந்துள்ளார்.

இழந்தப் பணத்தை மீண்டும் கைவசப்படுத்த குறுக்கு வழி சிந்தித்த அவர், தம் பணக்கார உறவுக்காரரின் மகனான ஆதித்யாவை தம் நண்பருடன் சேர்ந்து கடத்தி வைத்துக்கொண்டு 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். ஆதித்யாவின் தந்தை தம் மகன் கடத்தப்பட்ட விவரத்தைக் காவல்துறையில் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறை ஆதித்யாவைக் கண்டறிய தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

காவல்துறை விசாரிப்பதை அறிந்த ஹிமான்ஷு ரங்காவும் நண்பரும், ஆதித்யாவைக் கொன்று உடலை மறைக்க எரித்து விட்டிருக்கின்றனர். இந்நிலையில், ஹிமான்ஷுவின் காரில் ஆதித்யாவின் செருப்பு கிடந்ததைக் கண்ட ஆதித்யாவின் தந்தை காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை, ஹிமான்ஷுவைப் பிடித்து தகுந்த முறையில் விசாரித்ததில் ஹிமான்ஷு உண்மையைக் கக்கியுள்ளார். காவல்துறை மாணவர் ஹிமான்ஷு மற்றும் அவர் நண்பரைக் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இச்சம்பவம் மும்பையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. inneram

No comments

Powered by Blogger.