Header Ads



முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனின் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை



(அப்துல் அஸீஸ்)

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியினால் நடாத்தப்படும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்று  வெள்ளவத்தை ஒருமைப்பாட்டுக்கான மத்திய நிலையத்தில் ஆரம்பமானது.

நேற்று புதன்கிழமை தொடக்கம் நாளை  வரை இடம்பெறும் ஐக்கிய நாடுகள் 1325 தீர்மானம் தொடாபாகவும், சீடோ பிரமானங்கள் தொடர்பாகவும் இடம்பெறும் இப்பயிற்சிப்பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துறைசார்ந்த 35பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். 

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியின் ஸ்தாபகரும், அதன் இணைப்பாளருமாகிய ஜெஸிமா இஸ்மாயிலின் ஒருங்கிணைப்பில் இடம்பெறும் இந்நிகழ்வில் வளவாளர்களாக சமூக ஆய்வாளரும், ஊடகவியலாளருமாகிய அஷ்ஷெய்க் ரவூப் ஸெயின், சிரேஸ்ட சட்டத்தரணி அப்துல்   மர்சூக் ஆகியோர்கள் உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து கொள்கின்றனர்.

போர்க்காளத்திலும், போருக்கு பின்னரான காலத்திலும் பாதிக்கப்படும் பெண்கள் தொடர்பாவே இச்சட்ட பிரரேரணைகள் மற்றும் விதிகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.