Header Ads



இப்படியானதொரு கஸ்டம் யாருக்கும் வரக்கூடாது..!


(அப்துல்சலாம் யாசீம்)

பெயர்- ஐதுறுஸ் கனுன் நிஸா 

முகவரி- குட்டிக்கராச்சி,கிண்ணியா 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது- 2012-12-26

பிரசவ சத்திரசிகிச்சை நடந்தது 2012-12-28

வைத்தியசாலைக்கு சென்றதன் நோக்கம் - வலது கையில் கடுப்பு ஏற்பட்டமைக்கு மருந்து எடுப்பதற்காக 

கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி வலது கையில் நோவு ஏற்படுவதாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சென்ற 06 பிள்ளைகளின் தாயாரான ஐதுறுஸ் கனுன் நிஸா இன்று பிரசவ சத்திர சிகிச்சை செய்த நாள் முதல் சுயநினைவற்று கோமா நிலையில் வைத்தியசாலை கட்டிலில் உறங்கிக்கொண்டிருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவனாக இந்த தகவல்களை உங்களுடன் பரிமாறக்தொடங்குகின்றேன். 

சுயநிணைவில்  உள்ள கனுன் நிஸாவின்  வீட்டுக்குச்சென்றேன். கணவரான மனாப் உடம்பிலிருந்து வியர்வை வெளியேறிய நிலையில் தம்பி இப்போதுதான் நான் வந்தேன். என்ட ஜீவியம் இப்படி இருக்கும்  நிலையில் எனது பிறந்த பிள்ளைக்கு கூட  உம்மாட பாலைகுடிக்க முடியாத நிலைக்கு அல்லாஹ் ஆக்கி விட்டான். எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்! அந்நோயாளியின் 5 மாதக்குழந்தையான ( மெனுன் ஹனி )   தொட்டிலில் அழுத வண்ணம் இருப்பதை அவதானித்தேன். இப்படியானதொரு கஸ்டம் யாருக்கும் வரக்கூடாது என நான் நினைத்தேன்.  காலை கொல்லி எடுப்பதற்காக காட்டுக்குச்சென்று கஸ்டத்தில் வந்தும் எனது பிள்ளை அழுவதை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.06 பிள்ளையையும் நோமலாக பெத்த என்ட மனைவிக்கு இந்த ஒப்ரேசனுக்கு பிறகுதான் இப்படி நடந்தது. யாரிடம் சொல்வது 

இருந்தபோதிலும் எனது கஸ்ட நிலையை நேரில் வந்து பார்த்த சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் ஏ.முகம்மட் பாருக் ஆகியோரிடம் எனக்கு நீதியை பெற்றுத்தருமாறு  கூறினேன். அவர்களாவது நீதியை பெற்றுத்தருவார்களா?  என எதிர்பார்த்த வண்ணம்  இருக்கின்றேன் எனவும்  மனாப் தெரிவித்தார்.

கிண்ணியா,குட்டிக்கராச்சி பகுதியில் 06 பி;ள்ளைகளை சுகப்பிரசவத்தில் நோமல் டிலுவரியில் பெற்றெடுத்த மனைவி   பிரசவ நாளைக்கு 08 நாட்கள் இருந்தபோதிலும்   வீட்டுக்கு பக்கத்திலுள்ள பெண்னுடன் நடந்து சென்றவள் மருந்தெடுப்பதற்காக ! அன்று 26ம் திகதி கிண்ணியா தள வைத்தியசாலையில் வலது கையில் கடுப்பு ஏற்படுவதாக வைத்தியரிடம்  கூறியவேளை பிரசவ விடுதியில் சேர்க்கப்பட்டார். நான் அன்றைய நாள் யாழ்ப்பாணத்தில் தொழில் ரீதியாக சென்றிருந்தேன் எனவும் தெரிவித்தார்.   மனைவியை பார்ப்பதற்காக பிள்ளைகளுடன் வைத்தியசாலைக்கு வந்த நேரம் எனது மனைவி ஒப்ரேசன் அறையில் இருப்பதாக கேள்விப்பட்டேன். மனைவியை பார்க்கவும் இல்லை.என்னிடம் கையொப்பம் வைக்குமாறு தாதியர் கூறினார். மனைவியை அந்த நேரம் காணவில்லை! எனவும் தெரிவித்தார். மனைவியை பார்ப்பதற்காக காத்திருந்தும் பார்க்க முடியவில்லை. இரவாகிவிட்டது  வீட்டில் மற்றவர்களை பார்த்துக்ககொள்வதற்காக வந்துவிட்டேன். எனவும் மனாப்  கூறினார்.

அத்துடன் பக்கத்து கட்டிலில் இருந்த பெண்னொருவர்  இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஒப்ரேசனுக்கு பிறகு தன்னிடம்  தேனீர் கேட்டதாகவும் பின்னர் அங்குள்ள வைத்தியர் கொடுக்க வேண்டாம். பத்து மணித்தியாலத்திற்கு பிறகுதான் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இர்பானா எனும் பெண் வைத்தியர் சத்திரசிகிச்சை செய்த பின்னர் வீ.ஓ.ஐpக்கு தொலைபேசி மூலம் சொன்னதாகவும் அதனையயடுத்து அரை மணி நேரத்திற்குள் வீ.ஓ.ஐp வந்ததாகவும் தெரிவித்த அவர்  ஒப்ரேசனில் ஏதோ பிழை நடந்திருக்கின்றது. எனவும் தெரியமுடிந்தது எனவும் கூறினார்.

அதே வேளை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக தெரிவித்த வேளை சகோதரர்களுக்கு தெரியப்படுத்தினேன். எனவும் பக்கத்து கட்டில் பெண் கூறினார்.

தங்கையை மட்டக்களப்பு அனுப்புவதாக தெரியவந்ததையடுத்து ஹைறுன் நிஸா  ஆகிய நான் வைத்தியசாலைக்கு வந்தேன்.அப்போது தங்கை அம்பியுலன்ஸ் வண்டியில் இருந்தார். நோயாளியான எனது தங்கையை ஏற்றி பல மணி நேரம் அம்பியுலன்ஸ் வண்டிக்கு டீசல் இல்லை என கூறப்பட்டது. அதன் பிறகு இர்பானா டொக்டர் காசி கொடுத்தவுடன் வாகனம் புறப்பட்டது.

மட்டக்களப்பு சென்று மீண்டும் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார்கள்.அன்று தொடக்கம் இன்று வரை தங்கையுடன் வைத்தியசாலையில் இருக்கின்றேன்.

எனது தங்கையை பார்ப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் வந்தார்கள் அப்போது இர்பானா டொக்டரும் வந்தார். கட்டிலில் கையை வைத்துக்கொண்டு என்ன செய்ய இவருடைய சூழ்நிலை இப்படி நான்கு தரம் கரன்ட் போய் விட்டது.  அதோட இரண்டு தரம் ஹாட் எடக் வந்துவிட்டது என்று இர்பானா டொக்டர் சொல்லி அழுதார். ஒப்ரேசனில் தான் பிழை ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

எனது குடும்ப கஸ்ட நிலமைக்கு மத்தியில் தாய் பல மாதங்களாக வைத்தியசாலையில்  இருப்பதாகவும் நான்  பாடசாலைக்கு  சென்று பின்னேரம் வைத்தியசாலையில் பணிவிடை பார்த்து வருவதாகவும் தனது தாயை சுகப்படுத்தி தருமாறு வேண்டுவதாகவும் மூத்த மகள் அழுத வண்ணம் கூறினார்.

எனவே இப்படியான சம்பவம் நடப்பதற்கு காரணம் வைத்தியர்கள் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை கொடுத்து வைத்தியசாலையில் நோயாளர்கள் விடயத்தில் அக்கறையின்றி செயற்படுவதாகும். பாதிக்கப்பட்டவரின் குடும்ப நிலை மிகவும் பாதிப்புக்களையும் மனக்கவலையையும் தோற்றுவிக்கின்றது. கொல்லி வெட்டி ஜீவியத்தை களிக்கும் நபரின் மனைவி இப்படியானதொரு கவலைக்கிடமாக உள்ளதை நேரில் பார்த்தால் உங்களுக்கும் வைத்தியர்களின் கவனயீனம் தென்படும்.

 குறிப்பு - இதுகுறித்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகம் உரியமுறைப்படி விளக்கம் தருமாயின் நிச்சயம் அதனை பதிவுசெய்வோம்.

8 comments:

  1. தயவூ செய்து இதில் சமந்த பட்ட டாக்டர்ஸ் இக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்டஈடும் பெற்றுதரபருங்கள் அப்பத்தான் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.

    ReplyDelete
  2. Very sad news,speacialy doctors in Sri Lanka, they are taking education freely,thay are using txt pay money.when they finish there education just focus to money money money,never care hospital.stop that private by the governament.The doctor lie to them.take her to legal action.cancel her regitration as soon as possible

    ReplyDelete
  3. மிகவும் கவலைக்குரிய விடயம் இல்லாதவர்கள் பாதிக்கப்படும்போது நாம் ஒவ்வொருவரும் அதற்கு குரல் கொடுக்கவேண்டும். சம்மந்தப்பட்ட வைத்தியரை கண்டிப்பாக விசாரிக்கவேண்டும், இது கண்டிக்கப்படவேண்டிய விடயம். அதென்ன வைத்திய சாலையா அல்லது முட்டாசுக்கடையா? உரிய முறையில் செய்யத்தெரியாத வைத்தியத்தை அந்த டொக்டர் எதற்கு செய்ய வேண்டும், நீங்கள் பழகிக்கொள்வதற்கு ஏழைகளின் உடலென்றால் காரியத்தை மறைத்துவிடலாமென்ற எண்ணமா? சகோதரர்களே இது போன்ற குற்றங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் நாம் இதற்கு நீதி கிடைக்கும் வரை விடக்கூடாது. இறைவன் காப்பாற்றவேண்டும் நாளையும் இதுபோன்ற நிலைமைகள் வர வாய்ப்புண்டு ஏனென்றால் டொக்டர்களின் கவனக்குறைவும், அரைகுறை கல்வியும்தான் நன்றாக விசாரிக்கவும் இதுபோன்ற வைத்தியசாலைகளில் இன்னமும் பிரச்சினைகள் இருக்கவாய்ப்புண்டு. அம்புலான்ஸ் ற்கு டீசல் அடிக்க காசில்லாமல் அவசரமாக எடுத்துச்செல்லவேண்டிய நோயாளியுடன் அரைமணி நேரம் இருந்தது என்பது எவ்வளவு கவலைக்குரியதும் முட்டாள்தனமான செயலும் இதைவிட அந்த வைத்தியசாலையை மூடிவிட்டு வீட்டிற்குபோகலாமே.

    ReplyDelete
  4. Most of the kinniya doctors don't know how to identify the desease. They only know about panadol and disprin.Doctor Irfana doesn't know how to dress a wound.so why she did this operation?

    ReplyDelete
  5. Very sad news and incident.Most of the kinniya doctors don't know how to identify the desease.They are just panadol,disprin doctors.Why Irfana did that operation?She is not a surgeon,just a MBBS.All of them should be brought foward for justice.

    ReplyDelete
  6. டொக்டர் இர்பானுக்கு தெரியாத விடயத்தை செய்ததற்காக அவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இது நடக்கவேண்டும் கிண்ணியாவில் இருக்கும் மக்கள் குரல்கொடுக்கத்தயாரா? இது போன்ற மனித உயிர்களுடன் விழையாடும் அரைவேக்காடுகளை விட்டு வைத்தால் நாளை இன்னும் இன்னும் நடக்க வாய்ப்புள்ளது இன்று இந்த சகோதரிக்கு நாளை யாருக்கு? வேண்டாம் அப்படியொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

    ReplyDelete
  7. மிகவும் கவலையான விடயம் அல்லாஹ் அவர்களுக்கு சுகத்தை கொடுக்கவேண்டும் எல்லாம் அவனது நாட்டம். ஆயினும் மேலே பேசியது போன்று டொக்டர்களுடைய கவலையீனம் அல்லது அறியாத்தனம் தற்காலத்தில் பாரிய பிரச்சினையாக இருக்கிறது குறிப்பாக முஸ்லீம் வைத்தியர்கள் இதில் உயர்ந்தவர்கள் என்று சொல்லவேண்டும் வைத்தியம் செய்வதில் நோயாளியோடு பேசுவது உளரீதியில் பாதி நோயை குணமாக்கிவிடும் பணம் கொடுத்து பார்க்கும்போது நன்றாக சிரித்து பேசுகிறார்கள் அதேநேரம் வைத்தியச்சலைக்கு சென்றால் தனக்கு கீழ் பயிற்சி எடுக்கும் வைத்தியர்கள் நோயாளியிடம் பயிற்சி எடுக்கிறார் ஏதாவது முடியாதவிடயத்தி மாத்திரம் நிபுணர் என்று சொல்லும் பெரியவரிடம் சொல்வார்கள் அவர் வந்து நோயாளிக்கு புரியாத பாசையில் ஏதோ சொல்லிவிட்டு போய்விடுவார். வசதிக்காரர்களை பார்த்தால் தனியார் மருத்துவனைக்கு அழைப்பதும் அது டியுட்டி நேரமானாலும் மணிக்கணக்கில் வெளியே சென்றுவருவதால் இப்படியான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. முஸ்லீம் வைத்தியர்களைப்பொறுத்தவரை இது தஃவா செய்வதற்கு நல்ல பொருத்தமான களம் பயன்படுத்துவார்களா? குறித்த சகோதரிவிடயத்தில் கைவலிக்கு சென்றவருக்கு பிரசவம் பார்த்தது ஏன்? ஒபரேஷன் பன்னும் போது பவர் கட் என்று சொல்லுவது அலட்சியமாக தெரியவில்லையா ஏன் அங்குள்ள ஜெனறேடர் வலை செய்யவில்லையா இவற்றை முற்கூட்டி ஆராயாமல் ஏன் ஒபரேஷன் செய்யவேண்டும் தவறு என்பது எல்லோருக்கும் நடக்கும் இவைகள் தவிக்கமுடிந்த தவறுகள் இன்னும் பலவிடயங்கள் இதில் பேசலாம் ஆனா ஒன்று மட்டும் உண்மை எந்த வைத்தியரும் வேண்டும் என்று செய்திருக்க மாட்டார்கள் அவர்களது கவனயீனம் அதற்காக அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்பதே சிறந்தவழி.

    ReplyDelete
  8. இந்த கொடுமை மட்டுமல்ல இன்னும் பல கொடுமைகள் கிண்ணியா வைத்தியசாலையில் நடக்கிறது...

    வைத்தியசாலை வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை இங்குள்ள டாக்டர்கள் காலையில் மாத்திரரே பார்வையிடுவதாக தெரிய வந்துள்ளது...இது இப்படியிருக்க

    அன்மையில் நடந்த சம்பவமொன்று..
    காலையில் வார்ட்டை பார்வையிட வந்த வைத்தயர் ஒருவர் அங்குள்ள தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகளை இவ்வாறு எழுப்பியுள்ளார்...
    'இங்கு என்ன பண்டிக் காவலுக்கா வந்திருக்கீங்க...எல்லாரும் எழும்புங்க பார்ப்போம்...' என மிக தரக்குறைவான வார்த்தையைப் பிரயோகித்துள்ளார்...

    ஏன் இங்கு மாத்திரம் இப்படி நடக்கிறது...? இதனை தட்டிக் கேக்க யாரும் இல்லையா..?

    ReplyDelete

Powered by Blogger.