கிழக்கு மாகாண படைவீரர் கௌரவிப்பு நிகழ்வு (படங்கள்)
(அப்துல்சலாம் யாசீம்)
'நாட்டின் அபிவிருத்திப் பாதையிலே மனிதஉரிமை'எனும் போர்வையில் சர்வதேசசக்திகளும் பல்வேறு அமைப்புக்களும் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளை தகர்தெறிந்து தாய்நாட்டைநேசிக்கும் குடிமக்களாக இந்நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்க கடமைப்பட்டுள்ளோம் எனகிழக்கு மாகாணஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நேற்று (15.05.2013) காலை திருகோணமலைபேதுருக் கோட்டை, 22ம் படைப்பிரிவுத் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற கிழக்குமாகாண படைவீரர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
தேசியபடைவீரர் (ரணவிரு) வாரத்தைஒட்டிகிழக்குமாகாணத்தில் சிறப்பாகநடந்தேறிய இந்நிகழ்வில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது ஊனமுற்ற படைவீரர்கள் ஆளுநராலும் ஏனைய அதிதிகளாலும் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆளுநர் அவர்கள் தொடர்ந்துஉரையாற்றுகையில் சிலஅமைப்புக்கள் சர்வதேசசக்திகளுடன் இணைந்துபல்வேறுவழிகளிலும் எமதுநாட்டின் ஸ்திரத்தன்மையைசீர்குலைக்கமுனைகின்றன. இவ்வாறானசக்திகள் எமதுநாட்டைமீண்டும் இருண்டயுகம் நோக்கிக் கொண்டுசெல்லும் நோக்குடனேயே இவ்வாறானகுற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன என்பதை புத்திஜீவிகள் யாவரும் அறிவீர். எனவே எமது வீரர்களின் மேலான உயிர்த்தியாகம் மூலம் பெறப்பட்ட இவ்விடுதலையினை பாதுகாத்துநிலைபெறச் செய்வதுஎம் அனைவரதும் கடமையாகும்.
இவ்விழாவில் கிழக்குமாகாணகௌரவமுதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத்,கிழக்குமாகாணசபைதவிசாளர் ஆரியவதிகலப்பதி, கிழக்குமாகாணசுகாதார அமைச்சர் ஐ.ஆ.ஆ.மன்சூர்,கிழக்குமாகாண வீதிஅபிவிருத்திஅமைச்சர் ஆ.ளு..உதுமாலெப்பைமற்றும் பிரதமசெயலாளர்,மாவட்டசெயலாளர் உட்படமாகாண சபை உறுப்பினர்கள்,முப்படைஉயர் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தினர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.
Post a Comment